img/728x90.jpg
img/728x90.jpg
பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் நான்கு வாரங்களுக்கு இடை நிறுத்தப்படுகிறது

பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் நான்கு வாரங்களுக்கு இடை நிறுத்தப்படுகிறது

பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி கோடை கால விடுமுறையை  அடுத்து கூடுகிறது. 4ஆம் 5ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் இடம்பெறுகின்றன. செப்டம்பர் 9ஆம் திகதியை அடுத்து  ஒக்டோபர்  14ஆம் திகதி வரை பாராளுமன்றம்  இடை நிறுத்தப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மகாராணியார்  அளித்துள்ளார்.

இதற்கிடையில் செப்டம்பர் 10ம் திகதிக்கு முன்பாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  ஒரு வாய்ப்பு உண்டு என்ற கருத்தும் நிலவுகிறது.

Boris Johnson has confirmed the Queens Speech will be held on 14 October (Picture: Getty)

இவ்வாறு பிரதமர் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டால், ஒக்டோபர் 14ஆம் தகதி பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பாராளுமன்றத்தில் உரையாற்றும் வரை பாராளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும்.

இந்த நிலை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தமின்றி விலகிக் கொள்ளும் பிரதமரின் எண்ணத்தை உறுதி செய்திருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி, ஒப்பந்தமின்றி விலகுவதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பை, இந்தப் பாராளுமன்ற இடை நிறுத்தமானது இல்லாததாக்கியுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற இடை நிறுத்தத்திற்கு எதிரான உணர்வலைகள் நாடெங்கும் எழுந்துள்ளன.

Handout image issued by 10 Downing Street of a letter written by Prime Minister Boris Johnson to MPs outlining his Government's plans and confirming that he has asked Queen Elizabeth II to end the current Parliamentary session ahead of a Queen's Speech on October 14. PRESS ASSOCIATION Photo. Issue date: Wednesday August 28, 2019. See PA story POLITICS Brexit. Photo credit should read: Downing Street/PA Wire NOTE TO EDITORS: This handout photo may only be used in for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the image or facts mentioned in the caption. Reuse of the picture may require further permission from the copyright holder.

எதிர் வரும் ஒக்டோபர் 31-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதி என அண்மையில் பொறுப்பேற்ற பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இரண்டாம் உலகப் போர் முடிவின் போது 1945ஆம் ஆண்டு பாராளுமன்றம் இடை நிறுத்தப்பட்ட பின் இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் இடை நிறுத்தப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது  குறிப்பிடத்தக்கது.

Britain's Queen Elizabeth II welcomes newly elected leader of the Conservative party, Boris Johnson during an audience in Buckingham Palace, London on July 24, 2019, where she invited him to become Prime Minister and form a new government. - Boris Johnson took over as Britain's prime minister Wednesday, promising to pull his country out of the European Union on October 31 by any means necessary. (Photo by Victoria Jones / POOL / AFP) (Photo credit should read VICTORIA JONES/AFP/Getty Images)