img/728x90.jpg
பிரெக்ஸிற் கால நீடிப்பை நிராகரிப்பதற்கான புதிய பிரிவை பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்கு பிரித்தானியா அரசாங்கம் தீர்மானம்

பிரெக்ஸிற் கால நீடிப்பை நிராகரிப்பதற்கான புதிய பிரிவை பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்கு பிரித்தானியா அரசாங்கம் தீர்மானம்

2020 ஆம் ஆண்டு இறுதிக்கு அப்பால் எந்தவொரு கால நீடிப்பையும் நிராகரிப்பதற்கான ஒரு புதிய பிரிவை பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரெக்ஸிற்றுக்கு பின்னரான காலம் 2020 டிசெம்பரில் முடிவடைகிறது, தற்போதைய திட்டங்களின் கீழ் பரஸ்பர ஒப்பந்தத்தால் இரண்டு ஆண்டுகள் வரை அது நீட்டிக்கப்படலாம்.

ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் வாக்களிக்கவுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் இந்த காலஅவகாசம் நீடிக்கப்படுவதை நிராகரிப்பதற்கான திட்டம் இணைக்கப்படவுள்ளது.

இடைக்காலத்திற்கு எந்த நீடிப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோர போவதில்லையென தேர்தல் பிரசாரங்களின் போது பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்திருந்தார்.

காலஅவகாசம் நீடிக்கப்படுவதை நிராகரிப்பதற்கான திட்டம் வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் வாய்ப்பை உயர்த்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் 2020 இறுதிக்குள் ஒப்பந்தமொன்று எட்டப்படுவதை உறுதி செய்வதில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுதியாக உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் மைக்கேல் கோவ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஆழமாக ஆராய்வதற்கு பாராளுமன்றத்துக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.