img/728x90.jpg
உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் - பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ஆய்வறிக்கை

உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் - பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ஆய்வறிக்கை

பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகில் பிரித்தானியாவின் நிலையை சேதப்படுத்தாது அந்நாடு ஒரு மேலாதிக்க உலகளாவிய பொருளாதாரமாக இருக்கும் எனவும் பிரான்சை விட முன்னேறி ஜேர்மனியின் நிலையையும் மாற்றியமைக்கும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அவுஸ்ரேலியாவின் குடியேற்ற விதிகளைப் பயன்படுத்தும் பொரிஸ் ஜோன்சனின் இதேபோன்ற திட்டங்களும் பொருளாதாரத்தில் ஊக்கமளிக்கிறது. இங்கிலாந்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்துவத் துறைகள் தங்களது போட்டியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜேர்மனியையும், ஜப்பானையும் பின்தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் எனவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா கடந்த காலத்தில் 4ஆவது இடத்தை பிடித்ததால் 2019ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. இது இன்னும் ஆறு ஆண்டுகளில் ஜேர்மனையும் 2034 இற்குள் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்லும்போது, உலகளவில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், 2034 ஆம் ஆண்டிற்குள் கனடா உலகின் எட்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்ரேலியா ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்திற்கு நகரும்.

உலகெங்கிலும் இருந்து திறமையான புலம்பெயர்ந்தோரை ஈர்க்கும் திறனுக்காக இரு நாடுகளும் உலகளாவிய லீக் அட்டவணையில் முன்னேறுகின்றன. குடியேற்றத்தை ஈர்ப்பதில் வெற்றிகரமான நாடுகள் வேகமாக வளர முனைகின்றன என இந்த ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது.

Image result for Britain economy