img/728x90.jpg
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் சினிமா- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படும்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் சினிமா- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படும்

சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்கள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்த அறிவிப்பினை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிப்பார் என நம்பப்படுகின்றது.

மார்ச் நடுப்பகுதியில் இருந்து மூடப்பட்ட இடங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும் வரை பார்வையாளர்களை வரவேற்க முடியும்.

இந்தநிலையில், 2 மீற்றர் தூர விதிமுறை மதிப்பாய்வைத் தொடர்ந்து பப்கள் எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியும் என்பதையும் பிரதமர் தீர்மானிக்க உள்ளார்.

சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் நேற்று கொரோனா வைரஸ் பின்வாங்குவதாக தெரிவித்தார். முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குவதற்கு இங்கிலாந்து தெளிவான பாதையில் உள்ளது என்றும் கூறினார்,