img/728x90.jpg
பிரித்தானியாவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுமார் 3,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

பிரித்தானியாவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுமார் 3,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

பிரித்தானியாவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சுமார் 3,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு வருவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனும் மூத்த அமைச்சர்களும் கூட்டம் ஒன்றை நடத்திவருகின்றனர்.

தற்போது 30 பேர் வரை ஓரிடத்தில் கூட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சொல்லப்போனால், இனி மேல் ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூட தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையில், கிறிஸ்துமஸ் நேரத்தில் நாடு சாதாரண நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார் போரிஸ் ஜான்சன்.ஆனால், மக்கள் கூடுவதற்கு இப்படி ஒரு தடை விதிக்கப்படும் பட்சத்தில், அது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான John Edmunds, கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கிறிஸ்துமஸ் பண்டிகையும் நெருங்கி வருகிறது.

இது மிகவும் கடினமான ஒரு விடயம், கிறிஸ்துமஸ் என்றால் என்ன? நமது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களை சந்திப்பதுதானே! உணவகங்களுக்கும் செல்வோம், அப்படிப் பார்த்தால் எல்லாமே அபாயம்தான், அதுவும் கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரும் வீடுகளுக்குள்தானே கூடுவோம் என்கிறார் அவர். அதாவது, இப்படிப்பட்ட கொரோனா பரவலும், அதற்கேற்ப மக்கள் கூடுவதற்கு தடைகளும் இருக்கும்போது எப்படி கிறிஸ்துமசைக் கொண்டாட முடியும் என்பது அவரது கேள்வி! கொவிட் 19 குளிர்காலத்தில் 87 வீதமான மருத்துவமனைகளை நிரப்பலாம் ஆய்வாளர்கள் எச்சரிக்கை.


உள்ளூர் முடக்கநிலையின் கீழ் கொண்டுவரப்படும் வேல்ஸின் முதல் பகுதியாக கேர்ஃபில்லி கவுண்டி மாறும் என்பதால் மக்கள், இதற்காக தயாராகி வருகின்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பி.எஸ்.டி 18:00 மணி முதல் யாரும் காரணமின்றி கேர்ஃபில்லி கவுண்டியிலிருந்து வெளியேறவோ அல்லது நுழையவோ அனுமதிக்க மாட்டார்கள்.

குடும்பம் மற்றும் நண்பர்கள் பிரிவில் வசிப்பவர்கள் இனி வீட்டிற்குள் சந்திக்கவோ அல்லது ஒரே இரவில் தங்கவோ முடியாது. இப்பகுதியில் வீடுகளில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்ளூர் முடக்கநிலை, ஒரு வாரத்தில் 98பேர் நேர்மறை சோதனை செய்ததன் பின்னணியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

வேல்ஸ் அரசாங்கம், 100,000 மக்கள்தொகைக்கு 55.4 கொரோனா வைரஸ் தொற்றுகளுடன், கேர்ஃபில்லி கவுண்டி வேல்ஸில் மிக உயர்ந்த வீதத்தையும் பிரித்தானியாவில் மிக உயர்ந்த வீதத்தையும் கொண்டுள்ளது என்று கூறியது.