img/728x90.jpg
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 68,053பேர் பாதிப்பு- 1,325பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 68,053பேர் பாதிப்பு- 1,325பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 68ஆயிரத்து 053பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 29இலட்சத்து 57ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 79ஆயிரத்து 833பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 64ஆயிரத்து 821பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 929பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 64ஆயிரத்து 821பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

லண்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடுவோம் என்பதுதான் உண்மை’ என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் ஒரு பெரிய சம்பவத்தை அறிவிக்கிறோம், ஏனெனில் இந்த வைரஸ் எங்கள் நகரத்திற்கு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையில் உள்ளது. இப்போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் என்ஹெச்எஸ் (தேசிய சுகாதார சேவை) அதிகமாகிவிடக்கூடும். மேலும் அதிகமான மக்கள் இறந்துவிடுவார்கள்.

30 லண்டன் மக்களில் ஒருவருக்கு இப்போது வைரஸ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தலைநகர் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 27 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு தாம் தகவல் அனுப்பியுள்ளதாகவும், இது மிகவும் மோசமான அவசரநிலை என்றும் மேயர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா, மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க நிறுவனமான மொடர்னா நிறுவன தடுப்பூசிக்கு பிரித்தானிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு, அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே ஃபைஸர்- பயோஎன்டெக், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிகளுக்கு பிரித்தானியா அனுமதி அளித்திருந்தது.

இதுகுறித்து பிரித்தானிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக் கடுமையான அலசலுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், மொடர்னா தடுப்பூசியும் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.