• :
  • :
களத்தில்

இந்த நூற்றாண்டில் வெட்கி தலை குனியும் சமூகமாக உங்களை தமிழ் தேசியஇனம் வரலாற்றில் பார்க்கிறது!

இந்த நூற்றாண்டில் வெட்கி தலை குனியும் சமூகமாக உங்களை தமிழ் தேசியஇனம் வரலாற்றில் பார்க்கிறது!

இந்த நூற்றாண்டில் வெட்கி தலை குனியும் சமூகமாக உங்களை தமிழ் தேசியஇனம் வரலாற்றில் பார்க்கிறது!

தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்மாராட்சி மண் எவ்வளவு உண்ணதமான மண் அது.  எத்தனை வீரர்களை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்தது.
 
இவ்வாறான மண்ணில் ஊர் கூடி தேர் இழுக்க சாதி ஒரு தடையா?
 
அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் சாதிய ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
 
ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த நவீன ஏற்பாட்டில் தேர் இழுக்கப்பட்டுள்ளது.
 
அடே துப்புக்கெட்ட சாதி வெறியர்களே எம்மினம் நலிவடைந்து வருகிறது. உன் அயலையோ உன்னையோ ஆக்கிரமிக்க பாரசீகத்தில் இருந்து மதம் பரப்ப இங்கு வந்து இனம் பரப்பி இடம்பிடிக்க வாறான். உன் ஊரில் நீயோ இன்னும் அறிவிலியாகி சாதிச் சாக்கடையில் உழல்கிறாய்.
 
மூடர்களே உன் சாதிப்பார்வை உன் ஊரில் மட்டுமே கடந்த ஒரு தசாப்தத்துக்கு முன் நீயே அலைந்தாய் ஏதிலியாக ஒருநேரக் கஞ்சிக்காய் அந்த வயிறு பசிக்கும் போது உன் வயிறு சாதிபாத்திருந்தால் இன்று இந்த மண்ணில் உன் உடம்பு உக்கி பலநாட்கள் ஆகியிருக்கும்.
 
கிணற்று தவளை போன்று வாழதே...!
உனக்கு வெளியே ஒர் உலகமிருக்கு வெளியில் வந்து பார்.... அங்கு மனிதரின் மான்புகள் மேன்மையுறுகின்றன.
 
புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் உள்ளூரில் வசிக்கும் உறவுகளும் தமது உழைப்புகளை முகம் தெரியாத பல உறவுகளுக்காக பகிர்கிறார்களே. அவர்களிடம் இல்லாத வேற்றுமை வறண்ட மண்ணில் சுருங்கி வாழும் இனக்குழுமத்தில் வருவது வெட்கக்கேடே.
 
மாறி வரும் காலநிலை மாற்றம் எமக்கு இந்த உலகமே நிரந்தரம் இல்லையேன்பதை அறிவுறுத்துகிறது அதை அறியாமல் தலையில் திமிர் ஏறி அலைபவர்களே உங்கள் செயலுக்காக வருந்துகிறோம்.
 
மனிதராக மாறுங்கள். அன்பை மூலமந்திரமாக கூறும் சைவத்தில் பிறந்து அவ்வாறான மதநிகழ்வில் நீங்கள் வேற்றுமை காண்பது அந்த தேரேறி வரும் கடவுளுக்கே பொறுக்காது.
 
இச்செயலை கண்டித்து இவர்களை வெட்கி தலை குனியவைப்போம்.
 
- தெ.தமிழ்பித்தன் -