• :
  • :
களத்தில்

புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல்! 2009க்குப்பின் வடக்கில் 131 விகாரைகள் முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்

புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல்! 2009க்குப்பின் வடக்கில் 131 விகாரைகள் முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்

புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல்! 2009க்குப்பின் வடக்கில் 131 விகாரைகள் முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்.

வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார்.
 
பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
சிங்கள கடும்போக்கு வாதத்தின் முன்னால், சிறுபான்மை மக்களின் உணர்வுகள் எல்லாம் தோற்றுப் போவதை மீண்டும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.
 
இந்த சிலை வைப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
 
முதலாவது, தமிழர்களினது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியிருக்கும் சிங்களப் பேரினவாதம், தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் மேலும் ஊடுருவி காலஓட்டத்தில் காணிகளை ஆக்கிரமிப்பதற்கான ஆரம்ப கருவியாக இதனை பயன்படுத்தும்.
 
புத்தர் சிலையை வைத்து அங்கு மடாலயத்தை கட்டி, பின்னர் மகாவம்ச சித்தாந்தத்திற்கு  இதற்கும் முடிச்சுப் போட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முதற்கட்ட திட்டமாக இது இருக்கலாம்.
 
புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிலங்களை அடையாளப்படுத்துவதும் அதை தோண்டுவதும் பின்னர் சிங்கவர்களால் திட்டமிட்டு  புதைத்துவைத்த மகாவம்ச புனைகதைச் சிதைவுகளை தோண்டி எடுப்பதும், அதன்பின்னர் புத்த விகாரை காட்டுவதும் இதன் மூலம் முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இதன்மூலம் அமம்பலமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் 'மைனர்கள்', வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கிவிடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்,...
 
இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருப்பதாக தெரிவித்த அவர் இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும்.