• :
  • :
களத்தில்

அமெரிக்கா வெளியேறியது! அப்ப நம்மவர்களும் வெளியேறத்தயாரா

அமெரிக்கா வெளியேறியது! அப்ப நம்மவர்களும் வெளியேறத்தயாரா

அமெரிக்கா வெளியேறியது! அப்ப நம்மவர்களும் வெளியேறத்தயாரா?

 
ஜ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக வெளியேறியது! ரம் ஜயாவிற்கு கீழ் அமெரிக்கா எதில் இருந்தும் வெளியேறாவிட்டால் தான் ஆச்சரியம். ஆகவே உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது என்று நினைக்கிறேன்.
 
அமெரிக்காவில் அகதிக்குடும்பங்களின் பிள்ளைகளை பெற்றாரிடம் இருந்து பிரிப்பதற்காக கடும் கண்டனத்தை யூன் 18 முதல் யூலை 6 வரை நடைபெறுகின்ற 38வது மனித உரிமைக் கூட்டத்தொடரில் வெளியிட்ப்பட்டு வரும் நிலையில் அதற்காக வெளியேறுகிறோம் என்று சொல்லாமல் தொடர்ந்தும் இஸ்ரேலை வசைபாடுவதால் வெளியேறுகிறோம் என்கிறது அமெரிக்கா.
 
அப்ப அமெரிக்கா கொண்டு வந்த ஜ.நா தீர்மானம்??? சிறீலங்காவிற்கு வைத்த ஆப்பு! எங்களை அமெரிக்கா எப்போதும் கைவிடாது. நம்பிக்கையோடு இருக்கிறம் எண்டு நாங்கள் மக்களுக்கு கொடுத்த நம்பிக்கை.. கோவிந்தாவா? அமெரிக்காவிற்கு பிடிக்கேல்லை எண்டு ஆணையாளர் குவையினையும் பெட்டி கட்டியாச்சு. இதைத் தான் சொல்லுறது காலத்தே பயிர் செய் எண்டு.
 
ஆறப்போட்ட கஞ்சி எப்பவும் பழங்கஞ்சி தான்... அனைவரிடமும் கையொப்பம் கூட இல்லாத வெற்றுக் காசோலைகளை வாங்கிக்கொண்டு அதைப் பெரும் சாணக்கியம் எண்டு பேசினால் இதைவிட வெறென்ன நிலையை எட்ட முடியும்??? கொடூரமாக மரணிக்கப்பட்ட அந்த அபலை உயிர்களின் நீதிக்கான அவலக்குரல் மட்டும் இன்னும் உயர்ந்து கேட்கிறது....
 
- நேரு குணரட்ணம் -