• :
  • :
களத்தில்

இன அழிப்பு நோக்கில் சிங்கள அரசின் நுட்பமான சதி!

 இன அழிப்பு நோக்கில் சிங்கள அரசின் நுட்பமான சதி!

இன அழிப்பு நோக்கில் சிங்கள அரசின் நுட்பமான சதி!

இன அழிப்பு என்பது ஒரு இனத்தைக் கூட்டாகக் கொல்வது மட்டுமல்ல.
 
அந்த இனக் குழுமத்தை இனம், மொழி, நிலம், வாழ்வு, பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் குறி வைத்து அழித்தொழிப்பு செய்வதாகும்.
 
அதன் ஒரு வடிவம்தான் அந்த இனத்தின் தேசிய அடையாளங்களை அழித்தொழிப்பதாகும்.
 
சிறுத்தை நமது தேசிய அடையாளம்.
 
அதை நாமே கொலை செய்து விட்டு மார் தட்டுவது என்ன மாதிரியான டிசைன்?
 
2009 இற்குப் பிறகு இன அழிப்பு நோக்கங்களுடன் தமிழீழக் காடுகளிலிருந்து சிறுத்தைக் குட்டிகள் கடத்தப்பட்டும், சுட்டுக் கொலையும் செய்யப்பட்டிருக்கின்றன.
 
அண்மையில் கூட இன அழிப்பு அரசின் படைகள் வன்னியில் ஒரு சிறுத்தையைச் சுட்டுப் படுகொலை செய்திருந்தார்கள்.
 
கிளிநொச்சியில் நம்மவர்களால் கொல்லப்பட்ட சிறுத்தைப் புலி அதன் தாய்ப்புலியாகவோ அல்லது இணைப் புலியாகவோ இருக்கலாம்.
 
மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள்கூட தமது உறவுகளைத் தேடும் பண்புகளைக் கொண்டவைதான்.
 
இன அழிப்பு நோக்கில் சிங்கள குடியேற்றங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் தமது வாழ்விடம் சுருங்குவதாலும், இப்படி தமது துணையைத் தேடி வழி மாறி ஊர்மனைக்குள்ளும் காட்டு விலங்குகள் வர நேரிடுகிறது.
 
இது அந்த விலங்குகளின் தவறா?
 
இன அழிப்பு அரசின் நுட்பமான சதியின் விளைவு.
 
இது புரியாமல் இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நமது தேசிய அடையாளத்தை நாமே அழித்து விட்டு குற்றவாளிகளாகவும் நிற்கிறோம்.
 
கொஞ்சமாவது, நாம் வாழும் காலத்தின் அரசியலைப் புரிந்து கொண்டு வாழப் பழகுவோம்.
 
- பரணி கிருஷ்ணராஜனி -