• :
  • :
களத்தில்

வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது! - ஆம் தேர்தல் வருகிறதல்லவா?

வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது! - ஆம் தேர்தல் வருகிறதல்லவா?

வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது! - ஆம் தேர்தல் வருகிறதல்லவா?

தேர்தல் வருகின்றதென்றால் நம்மவர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றவர்கள் போல் பேச ஆரம்பித்து விடுவார்கள்... மக்களை அதிகம் நாடி வருவார்கள்.. ஆட்சியாளர் எதுவும் செய்யவில்லை... ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்... ஒன்றுபட்டு எமது பலத்தை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பார்கள்... ஆம் தமிழ் அரசியலில் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது...
 
நெஞ்சில் உரமுமின்றி 
நேர்மை திரனுமின்றி 
வஞ்சனை செய்வாரடி கிளியே... 
வாய்ச்சொல்லில் வீரரடி...
 
இன்று வரை நாம் கொண்டுவந்த ஆட்சி எவ்விதத்திலும் அதைத் தாங்கிப்பிடிப்போம்... அதுவாக வீழ்ந்தாலும் தூக்கி நிறுத்துவோம் என சபதம் எடுத்து செயற்ப்பட்ட நம் அரசியல் வீராதி வீரர்கள்... தற்போது அவ்வாட்சியையே போட்டுத் தள்ளுகின்றார்கள்... அனைத்து வாக்களிப்பிலும் ஆட்சியை ஆதரித்தே இன்றுவரை வாக்களிப்பு... ஆனால் இன்று அவர்கள் தவறாம்.. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் செலவீனமாக அறிவிக்கப்பட்ட 3 லட்சத்து 99 ஆயிரம் கொடிகளில் 14 திட்டங்களுக்காக 80 கோடிகளை வாங்கிவிட்டோம் என புளகாங்தமடைந்து ஆதரித்து வாக்களிப்பு... கூடவே வடக்கில் தமிழ் வேலை வாய்ப்பை பிடுங்கி வைத்திருக்கும் சிங்கள ஊர்காவல் படைகளுக்கு 1840 கோடி ஒதுக்கியதுக்கும் கூடவே ஆதரவு... அதாவது ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை... இந்த லட்சனத்தில் இராணுவ குறைப்புக் குறித்து மீண்டும் முதலைக்கண்ணீர்... அது சரி இன்னும் கலைக்கப்படாத வடமாகாண சபை முதலமைச்சர் யார் என பட்டிமன்றம் நடாத்தும் நீங்கள் ஏன் எப்போதே கலைக்கப்பட்டுவிட்ட கிழக்கு மாகாண முதலைமைச்சர் குறித்து எதுவும் பேசாதது ஏன்?
 
கேள்வி கேட்டு என்ன பயன்? பதிலா கிடைக்கப் போகிறது? சம்பந்தர் ஜயாவின் நான்கு ஆண்டுகள் ஆட்சியின் பின்னரான நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யும் அளவிலான கண்டுபிடிப்புக்களை ஒருமுறை படித்துப் தான் பாருங்களேன்!
 
The Tamil National Alliance (TNA) today said that ‘their' people were unhappy and that while they had contributed substantially to bring this government to power the government has shown very little progress in the past.
Leader of the Opposition and the TNA R. Sampanthan expressed these views when United Nations Resident Coordinator for Sri Lanka Terence D. Jones paid a courtesy call on him in Parliament.
 
"Our young people are being discriminated against in many matters, especially with regard to employment opportunities. Our people are suffering continually. This government accepted the need for certain things to be done and they must take the necessary steps to address those needs,” he said.
 
Raising his concerns on the implementation of the UNHRC resolution, Mr. Sampanthan said many aspects of the resolution are not being properly addressed.
 
Mr Sampanthan also raised his concerns over the slowness of the process of releasing lands in the North and East.“We don’t want the military to run farms on our lands which they are doing now, we want them to exit from these commercial activities which hinder the livelihoods of our people,” he said.
 
- நேரு குணரட்னம் -