• :
  • :
களத்தில்

பாதிக்கப்பட்ட மக்கள் எழுதுவதுதான் தீர்ப்பு - அதுவே தமிழ் இனத்தின் வரலாறும் கூட!

பாதிக்கப்பட்ட மக்கள் எழுதுவதுதான் தீர்ப்பு - அதுவே தமிழ் இனத்தின் வரலாறும் கூட!

பாதிக்கப்பட்ட மக்கள் எழுதுவதுதான் தீர்ப்பு - அதுவே தமிழ் இனத்தின் வரலாறும் கூட...

தமிழீழத்தில் 2009 இல் நடந்ததை நாம் இன அழிப்பு என்கிறோம். ஆனால் அதை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்ற வகையிலேயே அனைத்துலக சமூகம் சுருக்கி வைத்திருக்கிறது.

ஆனால் அதையும் தாண்டி அடிக்கடி சில அறிக்கைகளில் எட்டிப் பார்க்கிற ஒரு வாக்கியம் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் ( Crime against humanity)'.

எமது மக்களுக்கு தற்போது இவை ஒவ்வொன்றினதும் வரையறையும், உள்ளடக்கமும் தெளிவாகத் தெரியும்.

நீதிக்கான தொடர் போராட்டம் அவர்களுக்கு இதைப் படிப்பித்திருக்கிறது.

500 நாட்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் "வலிந்து காணாமலாக்கப்பட்டோரை" மீட்கும் எமது தாய்மார்களின் போராட்டத்திற்கு நேற்று சென்ற ஒரு ஊடகவியலாளர் அஙகிருந்த தாய்மார்கள் கருணாநிதி குறித்து கதைத்துக் கொண்டிருந்ததை கூறினார்.

அதை இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.. அதைத்தான் அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் உக்கிரமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் வலி - கூட்டு கோபம்.

இதைக்கூட புரிய முடியாமல் அவர்களுக்கு 'மனிதம், மாண்பு' குறித்து இங்கு வகுப்புக்கள் எடுக்கப்படுகின்றன.

இதையும் அவர்களை சந்தித்தபோது அந்த ஊடவியலாளர் கூறியிருக்கிறார்.

அப்போதுதான் ஒரு தாய் கருணாநிதியின் குற்றத்தை Crime against humanity வகையில் சேர்த்திருக்கிறார்.

மனிதத்தையும், மாண்புகளையும் தொலைத்து விட்டு "மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு" உடந்தையாக இருந்தவருக்கு அந்த தியரி செல்லுமா? என்பதுதான் அவர் பேசியதன் உள்ளடக்கம்.

மக்கள் அதுவும் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் எழுதுவதுதான் தீர்ப்பு - அதுவே அந்த இனத்தின் வரலாறும் கூட...

அதைவிடுத்து மூளை வீங்கி வளைத்து வளைத்து தமது வசதிக்கு தக்கபடி மக்கள் போராட்டத்திற்கு வெளியே இருந்து வாந்தி எடுப்பவர்கள் எழுதுவதற்கு பெயர் வரலாறு அல்ல...

கருணாநிதிக்கு தமிழீழ வரலாற்றில் எத்தகைய இடம் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை உளமார - நேர்மையாக அறிய விரும்பினால் பஞ்சியைப் பார்க்காமல் வருடங்களைக் கடந்தும் நீதிக்காக வீதியில் கிடக்கும் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..

அதுவே உண்மை வரலாறு - அதுதான் அவருக்கான இடம்.

"வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்கு தெளிவான உண்மையான வரலாற்றை விட்டுச்செல்வதே நீதிக்கான அடிப்படை

- பரணி கிரிஷ்ணராஜனி -