ஈழத்தமிழரும் திரு கருணாநிதி அவர்களும் - ஒரு வரலாற்று செய்தி!
முத்தமிழ் வித்தகர்
அஞ்சுகம் ஈன்ற அரும்புதல்வர்
தமிழின் முதல் எழுத்தே
திருக்குவளை ஈன்ற திருமுகமான
திரு கருணாநிதி அவர்கள்
மரண படுக்கையில் படுத்திருந்தாலும் அவர் காலத்தில் ஈழத்திற்காக நடந்த பல உண்மைகளை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும்
1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார்
2. என்போன்ற பல தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் சட்டம் எங்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது.
3. ஈழம் என்றால் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை காரணம் திமுக தலைமை உத்தரவு என்றார்கள்
4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் என்னையும் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்
5. திரு, கருணாநிதி ஆட்சியில்
’தமிழீழம்’, ’புலிகள்’,
‘ முத்துக்குமார்’,
‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும்
6. ஈழத்தில் உச்சகட்ட போர் நிகழும்போதுதான் கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது.. வெட்டி படுகொலை செய்யபட்ட என் மாமா. புதுக்கோட்டை முத்துக்குமார் குருதி கொடுத்தமைக்காக கைது செய்யபட்டார்
7. ஈழத்தில் நடந்த கொடுமைகளை தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. சி.டிக்களை களை என்னிடம் பலவற்றை பிடிங்கிகொண்டனர் காவல்துறையினர்
8. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு
9. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டனர்
10. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்
11. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றனர் திமுக சன் தொலைக்காட்சியில்
12. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது
13 தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.
14 போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.
15தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் நாஞ்சில் சம்பத்தும், கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.
16 சோனியாவிற்கு ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
17 கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது
18. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
19 கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது
20 போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.......
21முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.
திரு, கருணாநிதி அவர்களின் அரசியல் பயணம் என்பது ஏணியாய் ஏற்றி வைத்த தமிழனைவிட சோனியாவை மேல் என தன் குடும்பம் தன் சுயநலம் என மாறியதால் திரு, கருணாநிதி அவர்கள் என்றுமே ஈழத்திற்கு துரோகமானவர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளானவர்
குறிப்பு எனது இந்த பதிவிற்கு திமுக நண்பர்கள் நாகரீகமான முறையில் பதில் தரவும் அதுதான் திரு, கருணாநிதிக்கு பெருமை ஆரோக்கியமாக விவாதம் செய்வோம் நான் தயார்
எழுத்தாக்கம்
கீரமங்கலம் சிகா லெனின்
00 91 90473 57920
00 91 4371 242922
00 91 97861 17450
00 91 80983 93391