• :
  • :
களத்தில்

தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை!

தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை!

தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை!

தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர, அது அவர்களின் வாழ்க்கை மொழியாக இல்லை.
 
உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி 8 ஆம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்கிறது.
 
பயன்படுத்தப்படாத நிலை, வேகவேகமாக வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிடுகிற கலப்படநிலை போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழ்மொழிக்கு இந்த 8 ஆம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
 
"தமிழை யாராலும் அழிக்க முடியாது. அது முன்தோன்றிய மூத்தமொழி, உயர்தனிச் செம்மொழி, இலக்கிய வளம் செறிந்த மொழி, இலக்கணங்களால் ஆனமொழி' என்றெல்லாம் சில அறிஞர்கள் பேசுவதுண்டு. அத்தகையப் பேச்சு அவர்களது மொழிப் பற்றின் விளைவாக எழுகின்ற ஒரு நம்பிக்கைதானேயன்றி சமூக அறிவியல் அல்ல. பயன்படுத்தப்படாத எதுவொன்றும் படிப்படியாக மறைந்து அழிந்துவிடும் என்பது மொழிகளுக்கும் பொருந்தும்.
 
#தமிழறிஞர் ஜெயபாஸ்கரன்.