img/728x90.jpg
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறிஉள்ளது!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறிஉள்ளது!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறியிருப்பதை கடந்த பத்து வருடங்களாக தமிழகம் சந்திக்கும் நெருக்கடிகளை உன்னிப்பாக அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும்.

கூடங்குளத்திலிருந்து - தூத்துக்குடி வரை இந்திய அரசுக்கு எதிரான நூற்றுக்கணக்கான போராட்டங்களே இதற்கான சான்று.

தமிழீழ நடைமுறை அரசை அழித்த நீட்சியோடு தமிழகத்தை முடக்க இந்திய வல்லாதிக்கம் முற்பட மறுவளமாக புலிப் பண்பாட்டின் தொடர்ச்சியாக அதை எதிர்த்து 
அடிபணியாது போராடும் பண்பை தனதாக்கிக் கொண்டது தமிழகம்.

தற்போது இந்தியத் தேசிய புலனாய்வு சட்டத் திருத்தத்தினூடாக மேற்படி எதிர்ப்பு போராட்டங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் இனி இத்தகைய போராட்டங்கள் உளவு பார்க்கப்பட்டு மக்களும்/ போராளிகளும் முடக்கப்படும் பேராபத்து இதன் பின்னணியில் உள்ளது.

எனவே வேறு எந்த மாநிலம் எதிர்க்காவிட்டாலும் தமிழக போராட்ட சூழலை உணர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூர்க்கமாக இதை எதிர்த்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மறைமுக ஆதரவு கொடுத்து விட்டு வந்து திமுக காரர்கள் இப்போது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.

அவர்கள் அப்படித்தான். அது அவர்கள் பாரம்பரிய அரசியல்.

ஆனால் 'திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் பாசிச பாஜக வந்திடும்' என்று தமிழக மக்களின் காதில பூச்சுத்திய பெரியாரிஸ்டுகள்/ திராவிட இயக்கங்கள்/ புத்திஜீவிகளை எந்த பட்டியலில் சேர்ப்பது?

தற்போது இந்த கும்பல் கள்ள மவுனம் சாதிக்கிறது.

தமிழகத்தை நம்பி ஈழப் போராட்டம் இல்லை. ஆனால் வலுமிக்க காரணிகளில் அதுவும் ஒன்று.

இந்த அடிப்படையில் தமிழகம் முடங்கும் போது ஏற்கனவே அனைத்து வழிகளிலும் முடக்கப்பட்டு திணறிக் கொண்டிருக்கும் எமக்கு இது மேலதிக சோர்வையும்/ நம்பிக்கையீனத்தையும் விதைக்கிறது.

- பரணி கிருஸ்ணரஜனி -