img/728x90.jpg
img/728x90.jpg
புலிகள் என்பது ஒரு இயக்கமல்ல - அது ஒரு காலகட்டப் பண்பாடு

புலிகள் என்பது ஒரு இயக்கமல்ல - அது ஒரு காலகட்டப் பண்பாடு

புலிகளை எதிர்த்தவர்கள் கூட தெரிந்தோ/ தெரியாமலோ அந்தப் பண்பாட்டை ஒழுகினார்கள்.

அதற்கு ஒரு சிறிய உதாரணம் 2005 தேர்தலில் புலிகளின் கோரிக்கையை ஏற்று புலி எதிர்ப்பாளர்கள் கூட பெரும்பாலும் வாக்களிக்கவில்லை.

தமிழர்களின் இயல்பான நண்டுப் பண்பாட்டின் விளைவாக மேலெழுந்த
இந்த இனத்தின் அக முரண்பாடுகள்/ சிக்கல்கள்/ குழுவாத சிந்தனைகள் / சுயநல விழுமியங்களை கிரமமாக உள்வாங்கி ஒரு நேர்கோட்டில் இழுத்து பிடித்து அதன் மீது ஆளுமை செலுத்திய ஒரு அதி மனிதன்தனாகத் தலைவர் பிரபாகரன் அந்தப் பண்பாட்டை உருவாக்கினார். அதுதான் புலிப் பண்பாடு.

இப்போது புலி நீக்க/ புலி எதிர்ப்பு/ இணக்க அரசியல்/ பிழைப்பு வாத போலித் தமிழ்த் தேசிய/ ஒட்டுக்குழு ஆய்வாளர்கள் சேர்ந்தும், உதிரிகளாகவும் ஒரு பண்பாட்டை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

அதுதான் பொது வேட்பாளரையும் நிறுத்த முடியவில்லை/ தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியவில்லை/ ஒரு வேட்பாளருடன் ஒரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை.

புரட்சி / பண்பாடு என்பது போராளிகளால் மக்கள் பின்புலத்தில் நிகழ்த்தப்படுவது.

எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை வரித்துக் கொண்ட ஆய்வாளர்களால் நிகழ்த்தப்படுவதில்லை என்பதை முடிந்தால் யாராவது இவர்களுக்குப் புரிய வைத்தால் புண்ணியமாப் போகும்.

புலிப் பண்பாடு மீளுருவாக்கம் செய்யப்படாமல் இங்கு எதுவுமே சாத்தியமில்லை.

மக்களுக்கு அது தெரிந்துதான் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

- பரணி கிருஷ்ணராஜனி -