• :
  • :
களத்தில்

இனஅழிப்பு பின்புலத்தில் பெண்கள். [ பகுதி இரண்டு ]

இனஅழிப்பு பின்புலத்தில் பெண்கள். [ பகுதி இரண்டு ]

இனஅழிப்பு பின்புலத்தில் பெண்கள்.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு 
உளவியல், பாலியல், வன்முறை, குடும்பம், பண்பாடு குறித்து சில குறிப்புக்கள்.

இன அழிப்பின் நேரடி இலக்காக பெண்கள்.

இனஅழிப்பு என்பதை நிறுவ அல்லது அதை அந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள ஒரு முன் நிபந்தளை ஒன்றை இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு அல்லது அதன் மீதான கோட்பாட்டுருவாக்கம் நம்மிடம் கோரி நிற்கிறது.
அதாவது 'இன அழிப்பு' என்று நாம் முன்வைக்கும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் எதிரிகளால் அதாவது அதில் ஈடுபட்ட அரசோ அல்லது ஒரு இனக்குழுவோ இன அழிப்பு 'நோக்கங்களுடன்' அதில் ஈடுபட்டனவா என்பதை நிறுவும் முன் நிபந்தனைதான் அது.
 
நேரடியான அழித்தொழிப்பு நடைபெறும் போது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனக் குழுமத்திற்கு சார்பாக நின்று ஆயுதம் தாங்கிப் போராடும் ஒரு குழுவை அல்லது அந்த இனத்தின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி இந்த 'நோக்கங்கள்' மறைக்கப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்ட நிலையில் அழித்தொழிப்பை நடத்தி முடித்துவிடுகிறார்கள்.
 
சாட்சியம் அற்ற அழித்தொழிப்பு ஒன்று நடப்பதற்கு ஏதுவாக வழி விட்டு ஒதுங்கிய இந்த அனைத்துலக சமூகம் என்று விளிக்கப்படும் நிறுவனமயப் படுத்தப்பட்ட அரசு சார் உலக ஒழுங்கைப் பேணும் ஐநா உள்ளிட்ட அரசு - அரசு சாராத அமைப்புக்கள் பிற்பாடு நடந்த அழித்தொழிப்பின் பின்னான 'நோக்கங்கள்' இனஅழிப்பு சார்ந்ததுதானா? என்று நிறுவும்படி அழித்தொழிக்கப்பட்ட இனக் குழுமத்திடம் கேட்கத் தவறுவதில்லை.
 
அது மட்டுமல்ல நடந்த அழித்தொழிப்பை மனித உரிமை மீறல் போர்க்கால நெறி பிறழ்வுகள், போர்க் குற்றம் என்று சுருக்குவதுடன் அழித்தொழிப்பின் கனதி ஒரு வரையறை தாண்டி விளைவுகளை ஏற்படுத்தும் கன பரிமாணத்தை உணர்ந்தால் அதை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்ற சொல்லாடலுடன் நிறுத்தி விடுவார்கள்.
 
மறந்தும் இனஅழிப்பு என்ற சொல்லாடலை உச்சரிக்க மாட்டார்கள் - நாம் அதை நிறுவாதவரை.
இந்த இடத்தில்தான் அழிவுற்ற - தொடர்ந்து அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு இனமாக நமது கூட்டுப் பொறுப்பும்இ நீதிக்கான நமது பாதையை தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ஒரு மையமும் இடைவெட்டிக் கொள்கின்றன.
அதாவது இனஅழிப்பின் பின்னான 'நோக்கங்களை' நிறுவுவதனூடாகவே நாம் எமது நீதிக்கான பாதைய வகுத்துக் கொள்ள முடியும் என்பதுதான் அது.
 
அண்மையில் யஸ்மின் சுக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் வெளியிட்ட சிறீலங்காவின் இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த ஆவணங்கள் மிக முக்கியமானவை. 
இவ்வமைப்பு முன் வைக்கும் வாக்குமூலங்கள் நடந்தது இனஅழிப்பு என்பதை மட்டுமல்ல அதற்கான 'நோக்கங்கள்' இருந்ததையும் அம்மபலப்படுத்துகிறது.
 
போரில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்கள் இனஅழிப்பு நோக்கங்களுககாக செய்யப்படுகின்றன என்பதை நிறுவ உலகளவில் துறைசார் வல்லுனர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
ஆனாலும் ஐநா இதை ஒரு பகுதியளவே ஏற்றுக்கொள்கிறது.
 
ITJP ஆவணப்படுத்தியுள்ளது வன் புணர்வு முகாம்கள் அல்ல. அது இனஅழிப்பு சித்திரவதை முகாம்கள்.
குறிப்பாக பெண்களை தனிமைப்படுத்தி அவர்களை சித்திரவதைக்குட்படுத்த முகாம்கள் இயங்கியது என்பது இனஅழிப்பு 'நோக்கங்களின்' அப்பட்டமான ஆதாரங்கள் ஆகும்.
பிற்பாடு அவர்களை சமூகத்திற்குள் நடமாட விடுவதன் பின்புலம் இனஅழிப்பு 'நோக்கங்களை' கொண்டது என்பதை மிக இலகுவாக நிறுவ முடியும். 
 
ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான்
இனஅழிப்பு அரசு அவர்களையே நுட்பமாக குறிவைப்பதன் பின்புலம் இதுதான்.
இந்த வன்புணர்வு முகாம்கள் தொடக்கம் தற்போதைய எமது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வரை நமக்கு கிடைக்கும் சாட்சியங்கள் சிங்கள அரசிற்கு இனஅழிப்பு 'நோக்கங்கள்' இருந்தது என்பதே..
இதை எப்படி நாம் நிறுவப் போகிறோம் என்பதில் தங்கியுள்ளது நமக்கான நீதி.
 
குடும்ப அமைப்பை குலைத்தல். 
 
மே 15 ஐ உலக குடும்ப தினமாக ஐநா (International Day of Families) பிரகடணப்படுத்தியுள்ளது.
 
ஐநா என்ற உலக பொது அமைப்பு ஈழத் தமிழினத்தை அழித்தொழிக்க துணையாக நின்றது மட்டுமல்ல அதன் 'குடும்ப அமைப்பை' குலைப்பதனுடாக தனது இனஅழிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்திற்கு இன்னும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
 
மே 15 ஐ குடும்ப தினமாக கொண்டாடும் ஐநா அதே மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் இந்த இனத்தை -அதாவது இந்த இனத்தின் 'குடும்ப அமைப்பை' குலைக்க துணைபோனது. என்ன ஒரு நகைமுரண்?
 
தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை சிங்களம் தமிழீழத்தில் பிரயோகித்து வருகிறது. இலகுவில் யாராலும் அடையாளம் காணப்பட முடியாத அதி நுட்பமான வடிவங்கள் அவை.
 
அதன் 27 வடிவங்களை மிக அண்மையில்தான் கண்டுபிடித்தோம். 
 
இந்த 27 வடிவங்களினதும் மைய சரடாக இருப்பது 'குடும்பம்' என்ற அமைப்பியல்தான். அதை தகர்ப்பதனூடாக இந்த இனம் மீதான இறுதி அழித்தொழிப்பை இனஅழிப்பு அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.
 
நாமே எம்மீது ஒரு யுத்தத்தை நடத்தும் ஒரு வழிமுறையை திறந்து விடடிருக்கிறது இனஅழிப்பு அரசு.
 
இங்கு குற்றவாளிகள் நான் நீங்கள் உட்பட அனைவரும்தான். எங்களின் கையை கொண்டே எங்கள் கண்ணை குத்தும் வழிமுறைகளை இனஅழிப்பு அரசு திறந்து விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறது.
 
நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டீருக்கும் இனஅழிப்பின் பக்க விளைவாகவும் போருக்கு பிந்திய சமூகத்தில் தோற்றம் பெறும் அடிப்படை சிக்கல்களின் – முரண்பாடுகளின் விளைவாகவும்இ குறிப்பிட்ட இனக் குழுமத்திற்குள் குறிப்பாக 35 தொடக்கம் 40 வரையிலான மனப் பிறழ்வுகளை – உளவியற் சிக்கல்களை அடையாளம் காண முடியும்.
 
நம்மில் ஒவ்வொருவரும் – புலம் பெயர்ந்திருந்தாலும் கூட குறைந்தது 10 உளவியற் சிக்கலுக்குள் எம்மை பொருத்திக் கொண்டவர்களே.. ஆளாளுக்கு புற- அக சூழலின் விளைவாக இதன் தாக்கத்தின் அளவு வேறுபடுமேயொழிய முற்றாக இல்லை என்று கூற முடியாது.
 
நேரடியாக வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்தவர்களின் நிலையை இங்கு வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அதை இங்கு வெளிப்டையாக எழுதுவது கூட தவறு.
 
'இயல்பாக இருக்கிறோம்' என்று நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் இந்த விபரிப்பை வாசித்தால் வெறொரு உளவியல் சிக்கலுக்குள் தம்மை புதைக்க நேரிடும்.
அது சமூகத்தில் பல மோசமான விளைவுகளுக்கு வழி கோலும். தற்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.
 
ஒரு ஈழத்தமிழ் உயிரியின் எந்த பிரச்சினையும் தனிப்பட்டதல்ல. – அது மே 18 இற்குப் பிறகு பொதுப் பிரச்சினை.
 
எதையும் வெளியாக பேசவும் முடியாது. ஆனால் உளவியல் ஆற்றுப்படுத்துகையும் அவசியம். இது குறித்த புரிதல் உள்ள எங்களுக்கு ஒரு சிக்கலான நிலை இது.
 
குடும்பம் என்ற அமைப்பு குறித்து பேசும் போது மட்டுமல்ல ஒரு இனம் குறித்து பேசுவதென்றாலும் அங்கு பெண்கள்தான் ஆதாரமும் அடிப்படையும்.
 
இனஅழிப்பு அரசு அவர்களையே நுட்பமாக குறிவைப்பதன் பின்புலம் இதுதான்.
 
எனவே இதற்கு எதிர்வினையாற்றுவதென்றால் – இதிலிருந்து இனத்தை காப்பதென்றால் நாம் முன்வைக்கும் தியரிகள் பிற்போக்குத்தனமும்இ பெண்ணடிமைத்தனமும் நிறைந்த ஒரு கருத்தியலாக உருத்திரண்டதை ஒரு கட்டத்தில் அவதானித்தோம். அதிர்ச்சியாக இருந்தது.
 
மே 18 அன்று முள்ளிவாய்க்காலை எமது பெண்கள் கடக்க தொடங்கிய நாளிலிருந்து அவர்கள் இந்த இனத்திற்கான பாவச் சிலுவையை சுமக்க தொடங்கி விட்டார்கள். எதிரியின் இலக்கும் அவர்கள்தான் – நமது இலக்கும் அவர்கள்தான்.
 
போராட்ட களத்தில் நின்று ஆளுமையுடனும் உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமுமாய் இருந்த அவர்களை நாம் மீண்டும் 'பெண்களாக' மாற்ற அல்லது அணுக வேண்டிய நிர்ப்பந்தம். கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் அது.
பெண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் அதே சமயம் இனத்தின் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு புதிய சிக்கலை எமது இனப் பெண்கள் சந்திக்கத் தொடங்கிய களம்தான் முள்ளிவாய்க்கால். இங்கு ஆலோசனை என்பதும் அது குறித்த உளவியல் ஆற்றுப்படுத்துகை என்பதும் கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பான விடயம். கொஞ்சம் சறுக்கினாலும் பன்முக பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரும்.
 
பெண்ணியத்தின் தாயான சிமோன் தி பெவார்இ பேராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் குறித்து பேசிய அமில்கர் கப்ரால் தொடக்கம் நமது பெரியார் வரை சல்லடை போட்டு ஆய்வு செய்து சிலரை முழுமையாகவும் பலரை பகுதியளவும் சிதைத்து இந்த இனஅழிப்புக்கு எதிரான ஒரு தியரியை கண்டடைந்தோம்.
 
இனஅழிப்பு பின் புலத்தில் மனித உறவுகள்இ இனஅழிப்பு பின்புலத்தில் 'இசங்களின்' வீழ்ச்சிஇ இனஅழிப்பு பின் புலத்தில் பெண்களும் – பெண்ணியமும் -பெண்ணுரிமையும்' என்று பல கோணங்களில் இந்த உரையாடலை நீட்டியே ஒரு தற்காப்பு வடிவத்தை பெற்றோம்.
 
அது சரியானது என்று கூறமுடியாது – இந்த இனஅழிப்புக்கு எதிரான ஒரு தற்காலிக – தற்காப்பு வடிவம். அவ்வளவே!
 
விதவைகள்இ அரை விதவைகள்இ மாற்று திறனாளிகள் என்று எமது பெண்களின் நிலை இனஅழிப்பு பின்புலத்தில் பாலியல் முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டது.
 
ஏற்கனவே திருமண தடைஇ மண முறிவுகள் என்று மே 18 இற்கு பிறகு எமக்கெதிரான ஒரு பண்பாட்டு போர்க்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை என்பதும் பிறப்பு வீதம் முற்றாக வீழ்சியடைந்து எமது கருவள வீதம் பாதிக்கப்பட்டு பாரிய இனஅழிப்பை நாம் சந்தித்துள்ளோம்.
 
எனவே பாலியல் கல்விஇ மற்றும் பாலியல் ரீதியான எமது கண்ணோட்டம் இங்கு அதி தேவையாகிறது. பல அப்பாவி பெண்கள் சமூக கண்ணோட்டத்தில் பாலியல்ரீதியான முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டுப்படும் விபரீத சூழலை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
 
அனைத்து புரிதல்களும் உள்ள எம்மை போன்றோரே இத்தகைய சூழலை எதிர்கொள்வதில் அணுகுமுறைத் தவறுகளை விடுத்து விடுகிறோம். ஏனென்றால் நாமும் இந்த இனஅழிப்பின் பக்க விளைவுகள் தானே.. ஆண்களின் பார்வை இங்கு மாற்றப்பட வேண்டும். பெண்களும் தம்மை காலத்தின் தேவை கருதி தம்மை சுய பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும்.
பல கோணங்களில் பேச வேண்டிய பிரச்சிளை இது.
 
பெண்களின் 'உரிமை' என்பதை அதன் உள்ளார்ந்த அர்த்ததத்தில் காலச் சூழலுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இனஅழிப்பின் மையமாகவும் - இலக்காகவும் பெண்கள்தான் இருக்கிறார்கள்.
எனவே இனஅழிப்புச் சூழலில் பெண்களைப் 'பாதுகாத்தல்' என்பதுதான் அர்த்தம்பொதிந்த ஒரு செயற் பொறிமுறையாக இருக்க முடியும். இங்கு 'பாதுகாத்தல்' என்பதற்கு பல விளக்கங்களை பதிவு செய்ய முடியும்.
 
எனவே இந்த இனஅழிப்புக்கு சரியான எதிர்வினை என்றால் நாம் 'குடும்பம்' என்ற கட்டமைப்பை குலையாமல் பேணுவதில்தான் தங்கியுள்ளது. இது கொஞ்சம் பிற்போக்குத்னமாகவும் பெண்ணிய முரண் கதையாடல்களுக்கும் வழி சமைப்பதாகவும் சிலர் கருதலாம்.
 
ஆனால் இதில்தான் தங்கியுள்ளது நமது இருப்பும் அடையாளமும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக இனஅழிப்பு அரசு 'குடும்பம்' என்ற அமைப்பை சிதைப்பதில் கவனத்தை குவித்துள்ளதை அதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும்.
 
2009 நேரடி இனஅழிப்புக்கு பிறகு விதவைகள்இ அரை விதவைகள்இ மாற்று திறனாளிகள்இ தொடர் மண முறிவுகள்இ திருமண தடைகள் இதன் விளைவான பெண் தலைமைத்துவ குடும்பங்களை தொடர்ந்து பேணும் இனஅழிப்பு அரசின் நுட்பமான சதி 'குடும்பம்' என்ற அமைப்பை சிதைப்பதனூடாகவே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
 
இது பெண்களை மையமாகக் கொண்ட பொருண்மியஇ உளவியல்இ பாலியல் முரண்பாடுகளுக்கு வழி சமைக்கிறது. இது பல சமூக ஏற்றத்தாழ்வுகளையும் – இனத் தளம்பலையும் கட்டமைக்கிறது.
இதனால் ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை என்பதும் பிறப்பு வீதம் முற்றாக வீழ்சியடைந்து எமது கருவள வீதம் பாதிக்கப்பட்டு பாரிய இனஅழிப்பை நாம் சந்தித்துள்ளோம்.
 
ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகளும் அதைத் தாங்கிய மக்களும் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.
 
இனஅழிப்பு அரசு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியதென்பதற்கும் அப்பால் தோல்வியும் நிச்சயமற்ற எதிர்காலமும் எமது மக்களினதும் போராளிகளினதும் உளவியலை ஊனப்படுத்தி குருரமாகச் சிதைத்து அது சமூகத்திற்குள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
 
விளைவாக உறவுகளை துண்டித்து குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும்- மறக்கும் மன்னிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு முரண்பட்டு தனித்து வாழும் முடிவை தூரநோக்கற்று எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
 
இது தனிமனிதர்களாக அவர்களைப் பாதிக்கிறதென்பதற்கப்பால் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக பேராடி தன்னை நிறுவ முற்பட்டுகொண்டிருக்கும் ஒரு இனத்தை மோசமாகப் பாதிக்கிறது என்பதுதான் இதன் வெளிப்படை உண்மை.
 
இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக குடும்ப உறவுகளை துண்டிக்கும் போக்கு தொடராமல் இருக்க உளவளத்துணை அவசியம்.
 
உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பொது மக்களை விடுவோம். மே 18 இற்கு பிறகு உயிர் பிழைத்து தப்பி வந்த பல போராளிகள் குடும்பங்கள் மேற்படி உளவியற் சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டு குடும்ப பிணக்குகளினால் பரஸ்பரம் நம்பிக்கயற்று பிரிந்திருக்கிறார்கள் இதன் புள்ளிவிபர கணக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது.
 
இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.
அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இது தவறாகப் பார்க்கப்படும் போக்கு இன்றளவும் தொடர்கிறது.
 
இதய சுத்தியுடன்இ நேர்மையுடன் இன அழிப்புக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தால் இனி திருமண தடைகள்இ மண முறிவுகள் வேண்டாம். விதவைகள்இ அரை விதவைகள் என்ற நிலை வேண்டாம்.
எல்லோரும் குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும்இ மறக்கும்இ மன்னிக்கும் நிலையிலிருந்து குடும்ப வாழ்வில் இணைந்து குழந்தைகள பெற்று எமது 'குடும்ப' அமைப்பை பேணுவோம்.
 
இதை வேறு விதமாக சொல்வதென்றால்இ 'பெண் தலைமைத்துவ குடும்பங்கள்' என்ற நிலையை துடைத்தெறிந்தாலே போதும் இனஅழிப்பை சிங்களம் தொடர முடியாது.
 
பாலியல் வன்முறைகள்.
 
மே 18 இற்கு பிறகு நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறை சம்பவங்கள் வெளியாக தெரிந்தும் தெரியாமலும் நடந்திருக்கின்றன. இது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதி.
 
தமிழீழ நிழல் அரசின் காலத்தில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது காலாச்சார விழுமியங்களைப் பேணி சுதந்திரப் பறவைகளாக வாழ்ந்துவந்த காலம் ஒரு கனவாகிப் போய் இன்று எமது பெண்கள் சமுதாயமே இனவழிப்பின் ஒரு ஆயுதமாக பாலியல் வன்கொடுமைப் போருக்குள் அடக்கப்பட்டு வருகிறார்கள்.
 
போருக்கு பிந்திய சமூகத்தில் மனப்பிறழ்வுகளும் அதனால் உருக்கொள்ளும் உளவியற்சிக்கல்களும் பலதரப்பட்டவை. அதுவும் தோற்கடிக்கப்பட்டவர்கள் முற்று முழுதாக வெற்றி பெற்றவர்களின் ஆளுகைக்குள் தொடர்ந்து இருந்தால் எழும் உளவியற்படிநிலை சிதைவுகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.
 
சிறீலங்கா அரசும் இன அழிப்பு நோக்கில் திட்டமிட்டு செயற்படுத்தும் படிமுறைகள் ஒரு மனநோய் சமூகமாக தமிழினத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. கட்டமைக்கப்ட்ட இன அழிப்பின் மிக முக்கியமான படிமுறை இது. இந்த குற்றங்களின் பின்னணி இதுதான்.
 
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு முக்கிய கூறு தாம் அழிக்க நினைக்கும் இனத்தை ஒரு குற்ற சமூகமாக மாற்றுவது.
 
வித்தியாஇ சரண்யா படுகொலைகள் இந்த இன அழிப்பு கூறின் பக்க விளைவுகள்தான்.
 
போருக்கு பிந்திய சமூகத்தில் இன அழிப்பு நோக்கில் பொருண்மியஇ பண்பாட்டுஇ உளவியல் வாழ்வியல் நெருக்கடிகளை திட்டமிட்டு கடைப்பிடிக்கும் இன அழிப்பு அரசு இதை மேம்போக்காக மூடிமறைக்க கையிலெடுக்கும் ஒரு ஆயுதம்தான் 'அபிவிருத்தி' மற்றும் 'நல்லிணக்கம்'.
 
இந்த வலைக்குள் வீழாத ஆட்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு இது பயங்கரமான ஆயுதம். அடிப்படை அபிலாசைகளும் இனம்இ மொழிஇ நிலம் பண்பாடு என்ற அடிப்படையிலான மீள் வாழ்வும் குடியேற்றமும் இல்லாமல் இந்த 'அபிவிருத்தி' யை இன அழிப்பு அரசு நடைமுறைப்படுத்த முனையும்போது வெளிப்பார்வைக்கு புனர்வாழ்வாக தோற்றமளிக்கும் அதே தருணத்தில் மறுவளமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தம்மை அறியாமல் சிக்கி கொள்கிறது அந்த இனம். விளைவாக அந்த இனத்திலிருந்து ஒரு குற்ற சமூகம் வெளித்தள்ளப்படும்.
 
தமிழீழத்தில் இன்று தினமும் கொலைகள்இ பாலியல் வல்லுறவுகள்இ கடத்தல்கள்இ கோஸ்டி மோதல்கள்இ திருட்டுக்கள் என்று நடக்கும் கூத்துக்கள் இதன் ஒரு பகுதிதான்.
 
தமிழர்களின் (புலிகள்) ஆட்சியில் குற்ற செயல்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன. போரின் வடுக்களை தவிர ஒரு மேன்மையான சமூக அமைப்பு இருந்தது. இன்று அது கலைக்கப்பட்டுவிட்டது.
 
தின்பதற்கு சோறில்லை. ஆனால் இன்று பாலியல் உணர்வை தூண்டவும் அதை போக்கவும் வழி திறந்து விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு. விளைவாக காதல் என்ற பெயரில் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களும் அது மறுக்கப்படும் போது அதை வன்முறைரீதியாக எதிர்கொள்ளுமளவிற்கு ஒழுங்கற்ற சூழலையும் திட்டமிட்டு உருவாக்கி விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு.
 
பாலியல் உணர்வு குறித்தஇ பாலியல் கல்வி குறித்த போதிய புரிதல் இல்லாத சமூகத்தில் – அதுவும் இன அழிப்பை சந்தித்த – சந்தித்துகொண்டிருக்கிற ஒரு இனத்தில் பாலியல் உணர்வை தூண்டும் அதை பகிரங்கமாக காட்சிபடுத்தும் ஒரு சமூக அமைப்பு உருவாவது ஆரோக்கியமானதல்ல. அது புங்குடுதீவு குற்றவாளிகளைத்தான் சமூகத்தில் உருவாக்கும்.
 
குடும்ப தகராறு மற்றும் காதல் தொடர்பின் விளைவாக நடந்த செங்கல்லடிப் படுகொலைஇ அச்சுவேலிப் படுகொலை போன்ற சம்பவங்களை முன்பே நாம் இனஅழிப்பின் பக்க விளைவாக கருதி அந்த ஒழுங்கின் பிரகாரமே நீதி எட்டப்பட வேணடும் என்று ஆய்வு செய்து சமர்ப்பித்ததை அரசியல்வாதிகளும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் கவனத்தில் எடுக்காததன் விளைவே இத்தகைய படுகொலைகள் தொடர்வதற்கு காரணமாகும்.
 
இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் பட்டங்கள் திருடன் கொலைகாரன். ஏனென்றால் இதைத்தான் இன அழிப்பு அரசு விரும்புகிறது. இந்த நிலைகளை திட்டமிட்டே உருவாக்கியதே இன அழிப்பு அரசுதானே! இதற்கு பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு. இப்போது நடக்கிற எந்த கூத்திற்கும் பெயர் புனர்வாழ்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. நல்லிணக்கமும் இல்லை - அப்பட்டமான இன அழிப்பு இது.
 
தொடரும் தமிழ் பெண்களின் மரணத்தின் இன அழிப்பு பின்புலம்.
 
2009 இனஅழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பை சேர்ந்த மக்கள் - குறிப்பாக பெண்கள் பெரும்பாலும் மர்மமான முறையில் மரணங்களை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.
 
அதிலும் குறிப்பாக பெண் போராளிகள் நூற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் பெரும் சந்தேகத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன.
 
இயற்கை மரணம் என்ற பெயரில் ஒரு இனஅழிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் மறந்தும் மறைத்தும் கொண்டிருக்கிறோம்.
 
புனர்வாழ்வு என்ற பெயரில் இனஅழிப்பு வதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும்இ இறுதி இனஅழிப்பின் போதுஇ வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும் இரசாயன ஆயுதங்களின் பாவனையாலும் தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் எமது மக்களும் பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக மரணத்தை தினமும் சந்தித்து வருகிறார்கள்.
 
குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள்.
 
அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்திக்கும் உளவியற் பிரச்சினைகள். அதிகளவில் ஏதோ ஒரு வகையில் எமது மக்கள் 2009ற்கு பிறகு பலியாவதற்கான ஒரு சிறிய மருத்துவ விளக்கத்தை இங்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
 
இராசயன ஆயுதங்களின் பாவனைபால் எமது மக்களின் உடலில் மனித உடலில் இயற்கையாகக் காணப்படும் coenzyme Q அளவு குறைந்து விட்டது.
 
இது இனஅழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம் ( living genocidal factors) என்பதை நாம் பல தடவை வலியுறுத்தி விட்டோம்.
 
இதன் அளவு உடலில் குறையும் போது படிப்படியாக மிக ஆபத்தான புற்றுநோயிலிருந்து உளவியற் சிக்கல்கள் வரை தோன்றும் வாய்ப்பிருக்கிறது.
 
இதய பலவீனம் மற்றும் கர்ப்பபை சிக்கல்கள் இதன் குறிப்பிடத்தகுந்த பக்க விளைவுகளாகும்.
 
இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. அதற்கு தொடர் சிகிச்சை அவசியம். அத்தோடு பெரும் பொருளாதார பலம் வேண்டும்.
 
நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பொருண்மிய சிக்கலிற்குள் தவிக்கும் எமது மக்களுக்கு இது சாத்தியமா?
 
அத்துடன் ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும்இ பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுய பாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டு போய்விட்டது.
 
எனவே ஆரம்பத்திலேயே நோய்களை குணப்படுத்த அவர்கள் தயாரில்லை. இறுதியில் நோயும் முற்றி பொருளாதாரமும் நெருக்க தம்மையே அழித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள்.
 
அதிகளவிலான தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன.
 
உடல் நோய் மற்றும் உளவியற் சிக்கல்களுடன் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதராம் சரண்டப்பட்டு பொருண்மிய சிக்கல்களையும் சந்திக்கும் ஒரு வாழ்வை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
 
ஆனால் நமது மக்களின் நிலை இதுவென்பதுதான் இன்றைய யதார்த்தம்.ஒரு இனத்தின் ஆதாரமும்அடிப்படையும் பெண்கள்தான்.
 
அதுதான் பெண்களை குறிவைத்து தனது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது இனஅழிப்பு அரசு.
 
விதவைகள் மற்றும் அரை விதவைகள் என்ற ஒரு நிலையை நுட்பமாக தொடர்ந்து பேணுதல்இ கட்டாய கருத்தடை சிகிச்சைகளை மேற்கொள்ளல்இ
 
இறுதி இனஅழிப்பில் இராசாயன ஆயுத பாவனையாலும் குடிநீரில்லாமலும் பாதிக்கப்பட்ட பெண்களை முழுமையான மருத்துவ சிகிச்கைக்கு உட்படுத்தாமை
 
மற்றும் குறிப்பாக அவர்களுக்கான ஒரு உளவியல் ஆற்றுப்படுத்துகையை மேற்கொள்ளாது தடுத்தல் என்று பெண்களை மையப்படுத்திய கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை பட்டியலிட்டால் இன்று நாள் முழுக்க பட்டியலிட்டுக் கொண்டேயிருக்கலாம்.
 
பெண்கள் மரணமடைவதால் குழந்தைகள் அனாதைகளாகிறார்கள்இ அரை விதவைகள் என்ற நிலை தொடர்வதால் மே 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது.
 
இது பல சமூக சீரழிவுகளுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது. அத்துடன் காப்பப்பைஇ இதய பலவீனம் மற்றும் புற்று நோய்களினால் திருமணம் தடைப்படவோ அல்லது மேலதிக குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போவதால் எமது இனத்தின் கருவளவீதம் பாதிக்கப்படுகிறது.
 
ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனின்இ அவ்வினத்தின் மொத்தகருவள வீதம் 2 : 1 இலும் அதிகமாக இருக்க வேண்டும்.
 
அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2:1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.
 
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இரு பிள்ளைகள் ஆவது இளம்வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்க முடியும்.
 
ஆனால் தொடரும் சிங்களத்தின் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.
 
அதை விட முக்கியமானது எமது மக்களின் குறிப்பாக பெண்களின் மே 18 இற்கு பிறகான உளவியற் சிக்கல்கள். ஆளுக்கு ஆள் வேறுபடுகிறதேயொழிய எமது பெண்கள் ஒரு கூட்டு உளவியற் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.
 
உளவியல் ஆற்றுப்படுத்துகை அல்லது உளவளத்துளை ஆலோசனை என்பது மிக எளிமையான ஒரு விடயம். அது இந்த மாதிரியான ஒரு அழிவை சந்தித்த இனத்திற்கு - குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஒன்று.
 
ஆனால் அதைக்கூட மனநோய் என்ற கருத்தமைவின் அடிப்படையில் புரிந்து கொள்ளும் போக்கு படித்தவர்கள் சிலரிடம் கூட காணப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
 
இப்படியானவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை இந்த உளவளத்துணை ஆலோசனைக்குட்படுத்துவதை தடுப்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
ஏனெனில் இது இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது.எனவே பெண்களின் இந்த மரணங்களை நாம் சாதாரணமாகக் கடந்து போக முடியாது.
 
வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த மக்களுக்கு இனஅழிப்பு அரசு திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.
 
ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றும் வரையறுக்கிறோம்.
 
அதுதான் கடந்த ஏழு வருடங்களாக தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம்இ
 
அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை வைக்கப்படவில்லை.
 
அந்த கோரிக்கை வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால்
 
doctors without borders (MSF) போன்ற மருத்துவர்கள் எமது மக்களை சுயாதீனமாக மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும்போது இராசாயன ஆயுதங்களின் பாவனை தொடக்கம் இனஅழிப்பு நோக்கில் நடந்த பாலியல் வல்லுறவு குற்றங்கள் வரை மட்டுமல்ல , உளவள ஆலோசனை என்ற பெயரில் எமது போராளிகளும் மக்களினதும் உளவியல் இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்டதையும் கண்டறிந்திருப்பார்கள்.
 
அது சிங்களத்தை இனஅழிப்பு குற்றவாளிகளாக்கும் போதிய ஆதாரங்களாக இருந்திருக்கும். எனவேதான் 8 ஆண்டுகளாகியும் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் – தொடர்ந்து இனஅழிப்பை நடத்தவும் எதையுமே 'உள்ளக' அளவில் செய்ய முற்படுகிறது இனஅழிப்பு அரசு.
 
எனவே நாம் எமது பெண்களின் இந்த மரணங்களை - அவர்களின் நோய்க்கூறுகளை - உளவியற் சிக்கல்களை சாதாரணமாகக் கடந்து போகக்கூடாது.
 
இனஅழிப்பில் கணவனை இழந்த விதவைகளாகஇ காணாமல்போனதால் ர்யடக றனைழறள ஆனவர்களாகஇ போரில் ஊனமுற்ற குடும்பத்தலைவர்களால் குடும்பத்தை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவர்களாகஇ நோயாளிகளாகஇ உளச்சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டவர்களாக என்று எமது பெண்களின் நிலை மிகவும் சிக்கலானது.
 
இதிலிருந்து மீள விடாமல் இனஅழிப்பு அரசு நுட்பமாக வலையை பின்னியிருக்கும் சூழலில் இறுதியில் அவர்கள் உடல் நோய்வாய்ப்பட்டோ அல்லது மனநோயாளிகளாவோ தம்மை அழித்துக்கொள்ள நேரிடுகிறது.
 
இதுதான் இத்தகைய மரணங்களுக்கான காரணம். இன அழிப்பிற்கும் இந்த சாவுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நாமே இதை நம்புவது துரதிஸ்டவசமானது.
 
சிங்களப் படையில் தமிழ்ப் பெண்கள், கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதி.
 
சிறீலங்கா இராணுவத்தில் ஏற்கனவே சிங்களப் பெண்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் 'எடுபிடி' களாகவே இருந்தர்களே ஒழியஇ படையணிகளில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சிறீலங்கா இராணுவத்தில் சிங்களப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் ஊரறியாதவை.
 
பல சிங்கள மனித உரிமையாளர்களாலும் பல்கலைக்கழக புலமையாளர்களாலும் சிங்களப் படையில் பெண்கள் மீது தொடரும் வன்முறைகள் பற்ற