• :
  • :
களத்தில்

முஸ்லிம்களை வெளியேற்றியது - இனச் சுத்திகரிப்பா?

முஸ்லிம்களை வெளியேற்றியது - இனச் சுத்திகரிப்பா?

முஸ்லிம்களை வெளியேற்றியது 'இனச் சுத்திகரிப்பா?

 
இனஅழிப்பு என்பதை நிறுவ அல்லது அதை அந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள ஒரு முன் நிபந்தளை ஒன்றை இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு அல்லது அதன் மீதான கோட்பாட்டுருவாக்கம் நம்மிடம் கோரி நிற்கிறது.
 
அதாவது ‘இன அழிப்பு’ என்று நாம் முன்வைக்கும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் எதிரிகளால் அதாவது அதில் ஈடுபட்ட அரசோ அல்லது ஒரு இனக்குழுவோ இன அழிப்பு ‘நோக்கங்களுடன்’ அதில் ஈடுபட்டனவா என்பதை நிறுவும் முன் நிபந்தனைதான் அது.
 
இந்த அடிப்படையில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இன அழிப்பு நோக்கங்களைக் கொண்டது அல்ல. எனவே அதை இனச் சுத்திகரிப்பு என்று வரையறுப்பது அடிப்படையில் தவறு. 
 
புலிகளைப் பொருத்தவரை,    புலிகள் தமது போராட்டத்தைத் தக்க வைப்பதற்காக தற்காலிகமாகச் செய்த 'தவிர்க்கமுடியாத'  
 ஒரு பெரும் தவறு அது. 
 
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்தவரை மறக்க முடியாத - மன்னிக்க முடியாத ஒரு கூட்டு அவலம் அது. 
 
ஆனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதனூடாக அவர்களது உயிர் மட்டுமல்ல அடையாளம்,  தனித்துவம் என்பது கூட்டாகப் பேணப்பட்டது. அது எந்த சிதைவுக்கும் உள்ளாகவில்லை. 
 
ஆனால் தொடர்ந்து புலிகளின் ஆளுகைக்குள் இருக்க நேரிட்டிருந்தால் அவர்கள் பாரிய   மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருப்பார்கள். அது புலிகளை ஒரு இனப்படுகொலைக் குற்றவாளிகளாக்குவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் கொண்டிருந்தன.
 
காரணம், ஒன்றல்ல பல நூறு. அது விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். 
 
உதாரணத்திற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் பல நூறு தமிழர்களே, உளவு  பார்த்த குற்றம் 
சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். பலருக்கு மரண தண்டனையும்  வழங்கப்பட்டது.  இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு பிரயோகிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. 
 
ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு தினமும் கண்காணிக்ப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்வை குலைத்து 
அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கில் புலகளினால் கைது செய்ப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதென்பதும், அவர்களைக் கூட்டாகக்  கொலை செய்வதென்பதும் முறையே மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும்  இனப்படுகொலை உள்ளடக்கங்களை கொண்டதாக அறியப்பட்டிருக்கும்.
 
போதாததற்கு பாஸ் நடைமுறையை வேறு புலிகள் கடைப்பிடித்தார்கள். அது தம்மை ஒரு தனித்த இனக்குழுமமாக கருதும் முஸ்லிம்களைப் பொருத்தவரை  அது புலிகளின் - கட்டமைக்கப்பட்ட - இன அழிப்பு ஒன்றிற்கான உள்ளடக்கங்களையே அடையாளம் காட்டும்.
 
இது ஒரு கட்டத்தில் ஒரு இன அழிப்புக் குற்றமாக அனைத்துலக சமூகத்தால் கணிக்கப்பட்டு முஸ்லிம்களை சுதந்திரமாக வெளியேற்றுமாறு ஒரு கோரிக்கைகூட வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை யாரும் மறுக்க முடியாது. 
 
அது புலிகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கும். 
 
இப்படி தர்க்கரீதியாக பேச பல நூறு காரணங்கள் உண்டு. 
 
ஆனால் அதற்காக யாரும் வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியாது. அதற்காக 'இனச் சுத்திகரிப்பு' என்ற தவறான வார்த்தை பிரயோகங்கள் வருவதையும் அனுமதிக்க முடியாது.
 
இது நடந்த இனஅழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக நமக்கு நாமே குழி தோண்டுவதாகவே அமையும்.
 
முஸ்லிம்களுடன் மனம் திறந்த ஒரு உரையாடலை தொடங்கவும் இது தடை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
 
- பரணி கிருஸ்ணரஜனி -