• :
  • :
களத்தில்

பேரினவாத அரசை நம்பினால் இப்படித்தான் தவணை முறையில் பலி பீடத்தில் நிறுத்த படுவீர்கள்

பேரினவாத அரசை நம்பினால் இப்படித்தான் தவணை முறையில் பலி பீடத்தில் நிறுத்த படுவீர்கள்

பேரினவாத அரசை நம்பினால் இப்படித்தான் தவணை முறையில் பலி பீடத்தில் நிறுத்த படுவீர்கள்.

இந்த இடைப்பட்ட போராட்ட காலத்தில் புலிகளினால் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படவோ, அடையாள அழிப்புக்குள்ளாக்கப்படவோ இல்லை.
 
அவர்களது வணக்கத்தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் அழித்தொழிப்புக்குள்ளாகவில்லை. அது மட்டுமல்ல அவை எந்தவொரு அடையாள மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை.
 
ஆனால் சிங்களவர்களினாலும் முஸ்லிம்களினாலும் தமிழர்களின் கிராமங்கள், பாரம்பரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாள சிதைவுக்குட்படுத்தப்பட்டது மட்டுமல்ல, வணக்கத் தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் முற்றாக சிதைக்கப்பட்டு பவுத்த மற்றும் முஸ்லிம் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.
 
இது இனச்சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டது என்பதை தனியாகக் கூறவும் வேண்டுமா?
 
புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றும் போது கூறியது போலவே பின்பு சமாதான காலத்தில் அவர்களை அவர்களது தனித்துவ -பண்பாட்டு அடையாளங்களுடன் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற அனுமதித்தார்கள்.
 
சிங்களவர்களும் , முஸ்லிம்களும் தம்மால் அடையாள அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழர் தொன்ம நிலங்களை - கிராமங்களை மீளக் கையளிப்பார்களா?
 
அதுவரை அது 'இனச் சுத்திகரிப்பாகவே' இருக்கும்.
 
தமிழர் தரப்பு எந்த இனச் சுத்திகரிப்பிலும் ஈடுபடவில்லை என்பதே வரலாறு. இனியும் அதை செய்யப்போவதில்லை என்பதை 'நந்திக்கடல்' தெளிவாகவே வரையறுத்துள்ளது.
 
அத்துடன் 'நந்திக்கடல்' முஸ்லிம்களை தனித்துவ இனக்குழுமமாக அங்கீகரித்து அவர்கள் தமிழர் நிலத்தில் தமது தனித்துவ அடையாளத்துடன் வாழும் அவர்கள் உரிமையை ஏற்றுக் கொள்கிறது.
 
முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய அழுத்தமான செய்தி இது.
 
அதை விடுத்து பேரினவாத அரசை நம்பினால் இப்படித்தான் தவணை முறையில் பலி பீடத்தில் நிறுத்தப்படுவார்கள் - ஒரு கட்டத்தில் முழுமையான அழித்தொழிப்புக்குள்ளாக வேண்டியிருக்கும்.
 
- பரணி கிருஸ்ணரஜனி -