பிரான்சில் நடைபெற்ற பொன் சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு 2018

பிரான்சில் நடைபெற்ற பொன் சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு 2018

பிரான்சில் நடைபெற்ற பொன் சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு 2018
 
பிரான்சில் பொன். சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டுகள் நினைவு சுமந்த மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணிக்கு ஆயசைநை ன’டஎசல பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் மாவீரர் பொன். சிவகுமாரன் அவர்களின் திரு.உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1996 ஆம் ஆண்டில் சங்கரத்தையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் பல்லவி வினோகா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொன்.சிவகுமார் அவர்கள் குறித்த காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது. இவ்றி சூசென், செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், சிறப்புக் குறும்படங்களும் காண்பிக்கப்பட்டன. சிறப்புரைகளும் இடம்பெறற்ன.
நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடள் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.