தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் பிரான்சு.!

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் பிரான்சு.!

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் பிரான்சு.!

 
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழ தேசிய  மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டி எதிர்வரும் யூலை 7ஆம் 8ஆம் 14ஆம் 15ஆம் நாட்களில் சார்சேலில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
7,8,14 ஆம் நாள்களில் தெரிவுப் போட்டிகளும் 15 ஆம் நாள் இறுதிப்போட்டியும் காலை 9.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளன.
 
இதற்கான அனைத்து மாவீரர் நினைவு சுமந்த குழு விளையாட்டுக்கள் சனவரி மாதத்தில் இருந்தே குறித்தநாட்களில் நடைபெற்று வந்துள்ளது. இறுதியாக தடகளவிளையாட்டுக்கள் மேல் குறித்த நாட்களில் நடைபெறவுள்ளது.
 
இறுதி விளையாட்டாக மாவீரர் கிண்ணத்திற்கான இறுதி உதைபந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது. இதில் யாழ்டன் விளையாட்டுக் கழகமும், நல்லூர் – ஸ்தான் விளையாட்டுக் கழகமும் பங்கு கொள்ளவுள்ளன.