img/728x90.jpg
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்!

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்!

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்! 

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து முதன்முறையாக நடாத்திய இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா மற்றும் நான்காவது தடவையாக நடாத்திய தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு என்பன  நேற்று (16.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 மணி தொடக்கம் பிரான்சு savigny-le-temple  பகுதியில்  அமைந்துள்ள Le Millenaireé மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிகழ்வில் முதல் விளக்கேற்றலினை முதன்மைவிருந்தினர்களான கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி திரு.பாலசுகுமார் அவர்கள் , ளுயுஏஐபுNலு டுநு  வுநுஆPடுநு  மாநகர உதவி முதல்வரும், பாரிசு சுட் பல்கலைக்கழக பௌதிக இரசாயனவியல் பேராசிரியர் ரசல் மெயலே ருனோ, பேராசிரியர் முனைவர் முடியப்பன் மற்றும், தொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா, கல்வி மேம்பாட்டுப்பேரவை பொறுப்பாளர் திருமதி. அ. நகுலேஸ்வரி, பாரிசு தமிழ் வர்த்தக சங்கத் தலைவார் திரு. பாஸ்கரன், தமிழ்ச்சோலை  தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. nஐயக்குமாரன், தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
 
அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைப் பண் இசைக்கப்பட்டது. அதனையடுத்து வரவேற்பு நடனம், தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியிலான வரவேற்புரை என்பனவும் இடம்பெற்றன.
 
தொடர்ந்து மரபுரீதியான பட்டமளிப்பு விழா தொடங்குவதற்கான அறிவிப்பினை தமிழ் இணையக்கல்விக்கழக பீடாதிபதி கலாநிதி சி.தனராஜா அவர்கள் செய்துவைத்தார்.
 
மண்ணும் பண்பாடும் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்தப் பட்டமளிப்பு நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிக்கன் இலாம்பினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து கால்கொள்ளப்பட்டது.
 
பட்டகர்களின் உறுதிமொழியைத் தொடர்ந்து மேற்சான்றிதழ் நிலை 03, பட்டயம், மேற்பட்டயம் பயிலும் மாணவர்களுக்கான சான்;றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
 
தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம் பெற்றன.  கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி திரு.பாலசுகுமார், பாரிசு சுட் பல்கலைக்கழக பௌதிக இரசாயனவியல் பேராசிரியர் ரசல் மெயலே ருனோ, பேராசிரியர் முனைவர் முடியப்பன் மற்றும் பிரமுகர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றதையடுத்து, நன்றியுரை இடம்பெற்றது.
 
இடைவேளையைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு ஆரம்பமாகியது.
 
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திரு. உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை;சு கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கத்தை செலுத்தியிருந்தார்.
 
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. குசன்வில் தமிழ்ச்சோலை மாணவர்களின் கரகாட்டத்தைத் தொடர்ந்து பட்டகர்களின் ஆய்வு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்கள் வெளியிட்டுவைக்க முதன்மை விருந்தினர் பெற்றுக்கொண்டார்.
 
பட்டகர்களின் ஆய்வுரைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.
 
பன்னாட்டுப் பொறிக்குள் சிக்கியுள்ள ஈழத்தமிழர்கள் விடுதலையும், புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய முனைப்புகளும் என்னும் தலைப்பில - திருவாட்டி. உசாதேவி நடராசா ( பி, ஏ ) இளங்கலைமாணி.
 
குடும்ப ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் பிரான்சு நாட்டிற்கு வரும் மாணவர்கள் எதிர் கொள்ளும் கல்வி சார் சிக்கல்களும் தீர்வுகளும் -  திருவாட்டி நாகவினோதினி இரத்தினராசா ( பி.ஏ) இளங்கலைமாணி
 
கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளில் தாயகப்பற்று, மொழிப்பற்று வீச்சு – திருவாட்டி யமுனா மதியாபரணம் ( பி. ஏ ) இளங்கலைமாணி.
 
தாயகம் நோக்கிய  பணமாற்றல்களின் குமுகப் பொருண்மிய விளைவுகள் - திருவாட்டி கனகாம்பிகை பகீதரன் ( பி.ஏ) இளங்கலைமாணி.
 
அன்னை பூபதியின் அறநிலைப்போராட்டத்தின் படிப்பினைகளும் எதிர்கால நோக்கும் - திருவாட்டி அமுதினி ஐங்கரன் ( பி.ஏ) இளங்கலைமாணி.
 
ஈழத்தமிழர் போராட்ட வாழ்வியலில் தமிழீழ தேசியப்பாடல்களின் செல்வாக்கு – திருவாட்டி சுமதி மணிவண்ணன் ( பி.ஏ) இளங்கலைமாணி.
 
மொழித்தடத்தின் விடியல் - திரவாட்டி சர்வேசுவரி சோமசுந்தரம் அவர்களும்
 
தமிழர் வளர்ச்சிப்பணியில், இருபதாம் ஆண்டில் தமிழச்சோலைத் தலைமைப்பணியகம் - பிரான்சு திருவாளர் சந்திரராசா அகிலன் ( பி.ஏ) இளங்கலைமாணி அவர்களும் வழங்கியிருந்தனர்.
 
ஒவ்வொரு ஆய்வுகளும் தேடல்களும் மிகவும் காத்திரமான பெறுமதி மிக்கதாகவும், அமைந்திருந்தன. இந்த தேடல்களின் வெளிப்பாடுகள் தெரிந்தவர்களுக்கு இன்னும் தேடியிருக்கலாம் என்பதையும், தெரியாத புதிய தலைமுறைக்கு வியப்பாகவும் பெருமையாகவும் வந்திருந்தவர்களின் கருத்துக்களாக இருந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இவ் ஆய்வில் முத்தாய்ப்பாய் முதன்மை விரிவுரையாளர் திருவாளர். கலாநிதி. சிவஞானம் தனராசா அவர்கள் வன்னி வரலாற்றில் பண்டாரவன்னியன் பெறும் வகிபாகமும் திறனாய்வில் கிடைத்த சில உற்றுநோக்குதல்களும் என்று வழங்கிய தொகுதிநிலை ஆய்வு - 2  அன்றும் இன்றும் தமிழர் வரலாற்றில் தவறவிடப்பட்ட விடயங்கள், அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போது வீறு பெற்றதும் அதில் அந்நியருக் கெதிராக போராடிய மாவீரன் பண்டாரவன்னியக்கு நிகழ்காலத்தில் கொடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பற்றி தெரிவித்திருந்தமையும் அது நிகழ்வில் ஆவலுடன் கலந்து கொண்ட இளையவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், வியப்பையும் தமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருந்திருக்கின்றார்கள் என்பதை ஆதாரபூர்வமாக தெரிந்து கொள்ளும் போது அதனை கரவொலி மூலம் தமது உணர்வை தெரிவித்துக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதனை தாம் அறிந்து கொள்ளவதையிட்டு பெருமையடைவதையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
 
இடைNளையின் போது தமிழர் தாயக உணவு வகைகள் பனங்கட்டி கூழ், சக்கரைத்தண்ணீர், மோர், மற்றும் உணவுகளும் மக்களுக்கு வழங்கியிருந்தனர். 
 
 பட்டகர்களினால் உருவாக்கப்பட்டு இளைய தலைiமுறையினருக்கு போராட்டத்தின் பாதையை உணர்த்தும் வகையிலான வடமோடிக் கூத்தும் இடம்பெற்றிருந்தது. இதனை வழங்கியவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்வைச் சிறப்புக்கும் மற்றொரு விடயமாக பட்டயம் பெற்ற 8 பட்டகர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு விதைப்பு என்னும் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. தமிழர் கல்வி மேம்பாட்டும் பேரவை பொறுப்பாளர் திருமதி. அ. நகுலேஸ்வரி அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
 
ஆர்யொந்தை தமிழ்ச்சோலை மாணவர்களின் மயிலாட்டம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
 
நிகழ்வின் நுழைவாயிலில் தூக்கணாங்குருவிக்கூடு , வைக்கோலினால் வேயப்பட்ட வட்டக்குடில், தமிழர் பண்பாடு சார்ந்த கருவிகள், புற்றரைகள், மாட்டுவண்டில் என தாயகத்தை நினைவு படுத்தும் வகையிலான அமைப்புக்கள் அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தமை பட்டகர்களின் முயற்சியை மேலும் பறைசாற்றியிருந்தது.
 
இவ் பட்டமளிப்பு நிகழ்வுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உறவுகள் தமிழின உணர்வாளர்கள், என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆனால் காத்திரமானதும்,  காலத்தின் அவசியமான ஆய்வு கருத்தரங்கு நிகழ்வில் குறிப்பிட்டவர்களின் பங்கு காணமல் இல்லாமல் இருந்தமை மனதுக்கு மிகவும் நெருடலையும், சற்று ஏற்படுத்தியிருந்தது.
 
தன் இனத்தின் விடுதலைக்காக, சுதந்திரத்துக்காக, நிம்மதியான வாழ்வுக்காக, உலகத்திற்கு அகிம்சையை காட்டி அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை விடுவித்தாக கூறிக்கொள்ளும் இந்திய தேசத்தின் உண்மை முகத்திரையை உலகுக்கு வெளிக்காட்ட தன்னை 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாது தன்உயிரை ஈந்த தியாகத்தின் தீபம் திலீபனின் 31 வது ஆண்டில் அவனின் நிiவுகளை மனதில் சுமந்து மக்களும் மண்டபத்தில் நிறைந்திருந்தனர். நடைபெறப்போகும் பொங்குதமிழ் நிகழ்வு பற்றியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
 
நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.
 
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)