திலீப உணர்வுக் கரங்கள்- தியாக தீபம் திலீபன் நினைவாக ஆரம்பிக்கப்படும் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவித்திட்டம்!

திலீப உணர்வுக் கரங்கள்- தியாக தீபம் திலீபன் நினைவாக ஆரம்பிக்கப்படும் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவித்திட்டம்!

"திலீப உணர்வுக் கரங்கள்" தியாக தீபம் திலீபன் நினைவாக ஆரம்பிக்கப்படும் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவித்திட்டம்!  

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 வது ஆண்டை நினைவேந்தி சுடர்வணக்க நிகழ்வு பேர்லின் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களுடன் ,எமது தேசத்திற்காக தமது உயரிய உயிர்களை அர்ப்பணித்த ஒப்பற்ற மாவீரர் கேணல் சங்கர் மற்றும் இந் நாட்களில் வீரச்சாவை தழுவிய  ஏனைய மாவீரர்களையும்  நினைவில் நிறுத்தி ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.  உருகுவது மெழுகுவர்த்தி அல்ல, தமிழரின் உள்ளக் கோயிலில் குடியிருக்கும் ஒப்பற்ற தியாக தீபம், லெப்டினன் கேணல் திலீபன்! அவர்களின் காணொளித் தொகுப்பு காண்பிக்கப்பட்டு, தியாக தீபம் திலீபன் அவர்களின் போராடத்திற்கு அடித்தளமாக அமைந்த ஐந்து அம்சக் கோரிக்கையை மீள்நினைவுப்படுத்தப்பட்டது. 

இறுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக "திலீப உணர்வுக் கரங்கள்" எனும் சிந்தனைக்கு அமைய தாயகத்தில் உள்ள மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சுயதொழில் சிறப்பு உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, முதற்படியாக இரண்டு பயனாளிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஊடாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.