img/728x90.jpg
பிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு - பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு

பிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு - பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு

பிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு ’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு

(டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை (1931-2016)

அரசறிவியல் துறை அறிஞர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “ இலங்கை அரசியல் யாப்பு’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான லாக்கூர்னேவ் நகரத்தில் உள்ள Maison du people Guy Moquet என்ற மண்டபத்தில் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக சுடர் ஏற்றல் நிகழ்வுடன் நடைபெற்றது. லாக்கூர்னோவ் மாநகரசபையின் ஆலோசகர் திரு. அந்தோனி ருசேல், மற்றும் கலைப்பிரிவு> பொருளாதார மாநரமுக்கியஸ்தர்களுடன்> லாக்கூர்னோவ் உறுப்பினர் ஆசிரியருமாகிய திரு. பரமானந்தம் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து நூலாசிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்களின் காணெளி மூலமான நூல் பற்றி உரை இடம் பெற்றது. அவரின் 20 நிமிடங்கள் வரையான உரையை பிரெஞ்சு மொழியில் திருமதி. நிசானி சிறீதரன் அவர்கள் வழங்கியிருந்தார். வாழ்த்துரையை நகரசபை ஆலோசகர் தமிழின விடுதலை உணர்வாளர் திரு. அந்தோனி றூசெல் அவர்கள் வாழ்த்துரையை வழங்கினார்.

அவர் தனது உரையில் பல காத்திரமான விடயங்களைத் தெரிவித்திருந்தார். திரு. அந்தோனி ருசேல் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுடன் நல்லதொரு உறவை இன்று வரை பேணிவருபவர் சுனாமியின் பின் தாயகம் சென்று பலதமிழ் மக்களின் துன்பங்களை கண்டு வந்தவர் என்பதும் விடுதலைப்புலிகளின் மீதான தடையும்> கைதுகளும் பிரான்சில் இடம் பெற்றபோது தமிழ்மக்களினை போராட்டங்களை செய்யவைத்து அவர்களுக்கு பலமாக பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உண்மை நிலவரங்களையும் எடுத்தியம்பியவர்> அரச கட்சி சார்பற்ற பிரெஞ்சு முக்கியஸ்தர்களினதும்> மக்களுக்கும் தமிழ்மக்களுக்கும் பாலமாக இருந்தவர் இன்று வரை இருந்து வருபவர். பிரிகேடியர் அவர்களை பிரான்சு நாட்டுக்கு அழைத்து தாயகத்தின் உண்மை நிலவரத்தை பிரெஞ்சு அரசுடன் கதைப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்து முடிவுற்ற நிலையில் அவர் விமானத்தாக்குதலால் கொல்லப்பட்டது மிகுந்த துயரினை தந்த போதும் அதனை என்றும் நினைவாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரின் திருவுருவச்சிலை லாக்கூர்னோவ் பகுதியில் தமிழ்மக்கள் ஆதரவுடன் நிறுவவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டு அதை இவர் நிறைவேற்றியுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தை சரியாக சொல்லக்கூடிய ஆதரபூர்வமான புத்தகங்கள் தமிழிலும்> ஆங்கிலத்திலும் தான் அதிகம் எழுதப்பட்டுள்ளது என்றும் பிரெஞ்சு மொழியில் ஓரிரண்டு புத்தகங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்ததையும்> 2009 பின்னர் தற்போது மக்களின் காப்பரணாக இருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு புதிய அரசு நிறுவப்பட்டுள்ளதாகவும் அவ்அரசின் மூலம் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று சர்வதேசத்திற்கு கூறிவரும் சிறீலங்கா அரசுகள் இலங்கைத்தீவில் அந்த அரசாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் இன்றைய சர்வதே அரசியலுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இலங்கைத்தீவின் உண்மைத்தன்மையை சொல்ல வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் எத்தனையோ நியாயப்பாடுகள் இருந்து அவர்களும் அவர்களின் அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் பயங்கரவாத அமைப்பாகவே முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றும். குறிப்பாக பிரான்சில் இன்று அடுத்த  தலைமுறையினர் பலர் சிறந்த மொழியாளுமையும் தேசபற்றும் மிக்கவர்களாக இருக்கின்றார்கள் என்றும் பிரான்சில் வாழும் மக்கள் தொகைக்கு ஏனைய கனடா, பிரித்தானியா, சவிசு நாடுகளில் தமிழர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது போல் பிரான்சிலும் அது நடைபெறவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அரசியலில் ஏனைய கட்சிகளுடன் பேரம்பேசும் சக்திகளாக நாம் வரவேண்டும் நாம் வாழும் நாட்டை தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை தெரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்றும் அதற்கு இந்த நூல் மிகவும் முக்கிமான பங்கை வகிக்கும் என்பதோடு 70 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் ஒவ்வொரு அரசுகளாலும் எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் ஏந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை தான் இந்த நூலை வாசித்து நிறைய தெரியாத விளங்காத விடயங்களை விளங்கிக் கொண்டதாகவும் கூறினார். இந்த நூலானது எமக்காக அகதிகள் உரிமைக்காக வாதாடுகின்ற வழக்கறிஞர்கள் அரச நீதி உயர்பீடங்களில் புத்தகசாலைகளில் பிரான்சின் அனைத்து நூல் நிலையங்களில் பிரெஞ்சு மொழிபேசும் நாடுகளிலும்  இருக்க வேண்டிய புத்தகம் என்றும் கூறியிருந்தார். தற்போது சிறீலங்கா தேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இப்புத்தகம் வெளிவந்தமை சாலப்பொருத்தமாகும் என்று கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக நவநீதன் நிந்துலன் பிரெஞ்சு மொழியில் உரையாற்றியிருந்தார்.

சிறப்புரையை வழங்க தாமிழ் நாட்டில் இருந்து தமிழ்மக்களுக்காய் குரல் எழுப்பி வரும் எழுத்தாளர் திரு.பா. செயப்பிரகாசம் ( சூரியதீபன்) அவர்கள் ஆற்றியிருந்தார். ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் என்பதையும் 2002ல்  யாழ் மண்ணில் நடைபெற்ற மாநிடத்தின் கூடல் நிகழ்வில் பங்கு பற்றியதும் தேசியத்தலைவரை சந்தித்து பெற்ற அனுபவங்கள் பற்றியும் இந்த நூல் வாசிக்கப்பட்டு பலரின் அனுசரணையுடன் பிரெஞ்சு மொழி பாண்டித்தியம் பெற்றவர்களின் மொழிபெயர்ப்புடன் வெளிவந்தமை மிகுந்த சந்தோசமும் திருப்தியும் ஏற்படுகின்றது என்றும் இங்கு வாழும் அடுத்த தலைமுறை இதனைக்கையில் எடுத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இன்னும் பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்

நன்றியுரையை திரு. அ. புவனேசுபரராஜா அவர்கள் தலைவர் லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்கம் அவர்கள் தனது நன்றியை தெரிவித்திருந்தார். இப்புத்தகம் வெளிக்கொண்டர வேண்டும் என்ற தனது முயற்ச்சி எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தடங்கல் காரணமாக முடியாமல் பேனதையும் தற்பொழுது அது பல பேரின் உதவியுடன் நிறைவேறியிருப்பதையும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தமது தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து  இந்நூல் வெளிவர உதவிய லாக்கூர்னோவ் கலைக்கூடத்திற்கும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தெடர்ந்து வந்திருந்த அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் வர்த்தக முக்கியஸ்தர்கள் தாயகச் செயற்பாட்டாளர்கள் தமிழ் உணர்வாளர்கள் எனப்பலர் ஐயா பா. சேயப்பிரகாசம் அவர்களின் கைகளால் நூலினைப் பெற்றுக் கொண்டார்கள். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதி மொழியுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.