img/728x90.jpg
பிரான்சில் ஒள்னே சூ புவாபிறங்கோ தமிழ்ச்சங்கம் 20வது ஆண்டு தமிழ்ச்சோலை விழா!

பிரான்சில் ஒள்னே சூ புவாபிறங்கோ தமிழ்ச்சங்கம் 20வது ஆண்டு தமிழ்ச்சோலை விழா!

பிரான்சில் ஒள்னே சூ புவாபிறங்கோ தமிழ்ச்சங்கம் 20வது ஆண்டு தமிழ்ச்சோலை விழா!

பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றானஓள்னேசூபுவாதமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 20 ஆவதுஆண்டுவிழா 20.03.2019 சனிக்கிழமைமிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மதியம் 13.00 மணிக்குமண்டபவரவேற்புகலாசாரஒளியேற்றலுடன் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுடர்ஏற்றல் இடம் பெற்றன. பிரதமவிருந்தினர்திரு. பாலசுகுமாரன் அவர்கள் மற்றும் சிறப்புவிருந்தினர்கள் வில்லிசைக்கலைஞர்திரு. ராஐன் அவர்கள்,தமிழர்ஒருங்கிணைப்புக்குழுபரப்புரைப் பொறுப்பாளர்திரு. து. மேத்தாஅவர்களும்,மாவீரர்பணிமனைப் பொறுப்பாளர்திருமதி. முகுந்தினிஅவர்களும்,தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புப் பொறுப்பாளர்திரு. பாலகுமாரன் அவர்கள்,தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகதேர்வுப் பொறுப்பாளர்திரு. அகிலன் அவர்கள்,சங்கத் தலைவர்திருவிசுவநாதன் அவர்கள் நிர்வாகிதிரு. நல்லையாமற்றும் திரு. சிறிதரன், நடனஆசிரியர்திருமதி. தனுசாமகேந்திரராசாமற்றும் இசைஆசிரியர் ஆகியோர் ஏற்றி வைத்து மண்மீட்புக்காக உயிர்நீத்த அனைத்துஉயிர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்ச்சோலை 1,மற்றும் 2 மாணவர்களின் தமிழ்ச்சோலைகீதத்துடன் அரம்பமாகிவரவேற்புரையைதிருமதி.நல்லையாவாசுகிஅவர்கள் வழங்கியிருந்தார்.

வரவேற்புநடனமும்,தொடர்ந்துதமிழ் கலைகளானகாவடிநடனம்,குறவர்நடனம்,மயில் நடனம்  எழுச்சிநடனம்,விடுதலைநடனங்களும்,பாரதநாட்டியசண்முககௌத்துவம்,பரதநாட்டியம்,ஈழநாட்டியமும்,நாடகம் ,கவிதைவில்லுப்பாட்டு,சிறுவர்பாடல் ,தண்ணுமை,வயலின்,ஆங்கிலப்பாடல் அபிநயநடனம்,கண்ணன் நடனம்,போன்றநிகழ்வுகள் நடைபெற்றன. 20 ஆவதுஆண்டுவிழாஎன்பதால் சிறந்த கலை நிகழ்வுகளை மேடையேற்றியிருந்தனர்.

 20 ஆவதுஆண்டுநிறைவுமாணவர்களின் ஆக்கங்கள் கொண்டஆண்டுமலர்வெளியிட்டுவைக்கப்பட்டது. மலரினை பேராசிரியர் முனைவர்திரு. பாலசுகுமாரன் அவர்கள் வெளியிட்டுவைக்கமுதல் பிரதியை தமிழர்ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர்பெற்றுக்கொண்டார். தொடர்ந்துவில்லிசைக்கலைஞர்திரு. ராஐன் அவர்கள், நாடக ஆசிரியர் நெறியாளர்பயிற்றுனர்திரு . அரியம் மாஸ்ரர்ஆகியோர்தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்திரு. விசுவநாதன் அவர்களால் மதிப்பளிக்கவும் பட்டனர்மற்றும் வர்த்தகர்களும் இம்மலரினைப் பெற்றுக்கொண்டனர்.

ஓள்னோசூபுவாமா நகரஉதவிமுதல்வர்மற்றும் கலைமற்றும் நிர்வாகபொறுப்புஉறுப்பினர்கள் வந்து கலந்துகொண்டதுடன் உரையையும் ஆற்றியிருந்தனர்.

சிறப்புரையைபரப்புரைப்பொறுப்பாளர்முதலில் நிகழ்த்தியிருந்தார். ஓள்னேசூபுவாதமிழ்ச்சோலையின் தமிழ்மொழி,கலைபண்பாடுகளில் இருக்கும் பயபக்திதான் தமிழ்ச்சோலைமாணவர்களின் ஆற்றுகைத் திறனில் காணக்கூடியதாக இருந்ததுஎன்றும்,நிகழ்வின் ஆரம்பத்தில் சிலமாணவர்கள் தம்மையும் தாம் கற்கும் துறையையும் அறிமுகப்படுத்தியிருந்தனர். 

அவர்கள் வைத்தியராகவும்,பொறியியலாளராகவும்,கணக்காளராகவும்,வக்கீலாகவும் தம்மைஅறிமுகப்படுத்தியதும் தாம் எவ்வளவுதான் உயர்தரக்கல்வியைகற்றுவந்தாலும் இன்றும் தாங்கள் ஓள்னேசூபுவாதமிழ்ச்சோலையின் பிள்ளைகளாகவே இருப்பதைதெரியப்படுத்தியிருந்தவிடயத்தையும் சுட்டிக்காட்டிஎமதுகனவுகள் கொஞ்சம் கொஞ்சமாகநனவாகுவதையேகாட்டுகின்றதுஎன்றுகுறிப்பிட்டிருந்தார். மற்றும் தமிழர்தம் பாரம்பரிய கலையாகபேணிப்பாதுகாத்துவந்தவில்லிசைநிகழ்வானது இன்றுகாலச்சக்கரத்தில் சரியானவர்களால் சரியாகஎடுத்துச்செல்லப்படாமையால் வில்லிசை இன்றுவலிமையற்றஒருகலையாகசென்றுகொண்டிருக்கும் நேரம் வில்லிசைக்கலையின் இறுதிக்காலக்கலைஞர்களாக ஒருசிலரே இருப்பதாகவும் அதில் ஒருவராக இருக்கும் திரு. ராஐன் அவர்கள் விழாவில் விருந்திருந்தினராகக் கலந்துகொண்டதுடன் தமிழ்ச்சோலைக் குழந்தைகளுக்கு இது தான் வில்லிசைஎன்றவகையில் ஒருநிகழ்வைமேடையேற்றியிருந்ததையும் பாராட்டியிருந்தார். 

அதேபோலதான் கற்றவளர்த்தகலையைதன்னோடுமட்டும் நிறுத்திவிடாது அடுத்த தலை முறைக்குக்கு ஐரோப்பிய ரீதியில் சென்றுபயிற்சியளித்துவரும் திரு. அரியம் மாஸ்ரர்அவர்களையும் பாராட்டியிருந்தார். நீர் இன்றி அமையாது எம் உயிர்வாழ்வு என்பதுபோன்றுகலையில்லாதுவாழாதுஎம் தமிழர்வாழ்வும் அதன் இயக்கமும் என்று கூறியதோடு எமது அற்புதமானகலைகளும்,பண்பாடுகளும் இன்னும் பலஆண்டுகள் வாழவேண்டும் என்றால் அதற்குஒருநிலம் வேண்டும் அதனைபெற்றுக்கொள்ளநாம் உறுதிபூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒர்தசாப்தங்களுக்குமேலாகபிறாங்கோதமிழச்சங்கத்தின் தலைவராகவும் இருந்துதமிழ்ச்சங்கத்தின் பொருளாளராகவும்  இருந்துவரும் திரு. விசுவநாதன் அவர்கள் மாணவர்கள் , ஆசிரியர்கள்,மக்களின் கரகோசத்திற்குமத்தியில் பேராசிரியர்பாலசுகுமாரன் அவர்களால் பொன்னாடைஅணிவித்துநினைவுப் பொருள் வழங்கிமதிப்பளிக்கப்பட்டார்.அதேபோன்றுஆசிரியர்கள் ,சங்கஉறுப்பினர்களும் இவரால் மதிப்பளிப்புசெய்யப்பட்டனர்.

நிகழ்வின் முத்தாய்ப்பாய் பேராசிரியர்பாலசுகுமார்அவர்களின் நெறிப்படுத்தலில் ஈழநாட்டியம் என்னும் நாட்டிய நிகழ்வுபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. முதல்தரமாக ஓர் வித்தியசமானவகையில் இது வடிவமைக்கப்பட்டது நடனம்  வழங்கியஅனைத்துமாணவர்களும் மிகுந்தசிறப்புடன் தத்துருபமாகவழங்கியிருந்தனர். சிறியகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வியப்புடன் இவற்றைரசித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.அவரின் பலநாள் கனவாக இருந்த இந்நடனத்தைபயின்றுமேடையேற்றியபெருமைஓள்னேசூபுவாதமிழ்ச்சங்கத்திற்கேசேரும்.

தமிழ்ச்சோலைதலைமைப்பணியதேர்வுப் பொறுப்பாளர்அவர்கள் மதிப்புரையைவழங்கியிருந்தார். தமிழ்ச்சோலையின் அனைத்துப் போட்டிகளிலும் ஒள்னேசூபுவாமாணவர்களின் திறமையும்,தமிழ்க்கல்வியில் கலையில் மாணவர்களுக்குஉள்ள ஈடுபாடும்,ஆசிரியர்களின் உழைப்பும் அறுவடையாக இங்குதான் காண்பதாகவும் கூறியிருந்தார்.மாணவர்களுக்கானசான்றிதழ்களும் இவரால் வழங்கப்பட்டது.

தொடர்ந்தும் முல்லையின் மிடுக்கு இசைநாடகம்,பிரெஞ்சுமொழியில் மாமன்னன் இராவணன் நாடகம் ,நியாயமாக்கப்படும்  அநியாயங்கள்,பணமாபாநமாபோன்றநாடகம் நல்லகருத்துக்கதை; தந்திருந்தன. நிகழ்வு இரவு 10 மணியைதாண்டியிருந்தபோதும் மக்கள் கலையாமல் இருந்திருந்தனர். மாணவர்களின் ஆசிரியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் 20 ஆவதுஆண்டுநிகழ்வுசிறப்பாக நிறைவடைந்தது.