
துக்கத்தில் முடியும் என்று மாவீரன் பரிதியை எச்சரித்த பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இயக்கும் கே பி கும்பல்
துக்கத்தில் முடியும் என்று மாவீரன் பரிதியை எச்சரித்த பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இயக்கும் கே.பி கும்பல்! ஒலிப்பதிவு இணைப்பு! வெள்ளி ஜூலை 12, 2019
தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் தமது தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படத் தவறினால் அதன் விளைவு துக்கத்தில் முடிவதாக இருக்கும் என்று மாவீரன் பரிதியை அக்கும்பலின் பிரமுகரான தமிழரசன் என்பவர் மிரட்டிய ஒலிப்பதிவு ஆதாரத்தை சங்கதி-24 இணையத்தளம் வெளியிடுகின்றது.
26.09.2011 அன்று பிரான்சில் நடாத்தப்பட்ட கூட்டம் ஒன்றிற்கு மாவீரன் பரிதி அவர்கள் சமூகமளித்த பொழுது அவருக்கு இவ் எச்சரிக்கையை தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் சிங்கள ஒட்டுக்குழுவான கே.பி கும்பல் விடுத்திருந்தது.
எனினும் இக் கும்பலிற்குக் கட்டுப்படுவதற்கு மாவீரன் பரிதி மறுத்தார்.
இதனையடுத்து சரியாக ஒரு மாதம் கழித்து மாவீரன் பரிதி மீது 31.10.2011 அன்று பாரிசில் வாள்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இத் தாக்குதலில் காயங்களுடன் மாவீரன் பரிதி தப்பினார்.
இதன் பின்னர் ஓராண்டு கழித்து 08.11.2012 அன்று மாவீரன் பரிதி பாரிசில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
26.09.2011 அன்று மாவீரன் பரிதியைப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்த தலைமைச் செயலகம் என்ற கே.பி கும்பல், பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைக் கையகப்படுத்தி அதனை சிங்களக் கைப்பாவை அமைப்பாக மாற்றியமைத்திருப்பதோடு, ஆண்டுதோறும் விளையாட்டு விழாக்களையும் நடாத்தி வருகின்றது.
இவ் விளையாட்டு விழாக்களில் திரட்டப்படும் பணம் கே.பியால் கிளிநொச்சியில் நிர்வகிக்கப்படும் கட்டமைப்பு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.