img/728x90.jpg
img/728x90.jpg
பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன்  நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது.

இவ்நிகழ்வில் கேணல் பருதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன்  ஆகிய மாவீரர்களின் திரு உருவப்படங்களிற்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர் அவர்களும் மாவீரர் கேணல் செல்வாவின் சகோதரர் அவர்களும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றன.
போட்டி முடிவுகள் வருமாறு:

துடுப்பெடுத்தாட்டம்:

முதலாம் இடம்: எழிச்சி விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம் AU

மூன்றாம் இடம்:  அரியாலை ஐக்கிய கழகம் A

சிறந்த துடுப்பாட்ட வீரர்:  ஜெகன் (எழிச்சி)
சிறந்த பந்து வீச்சாளர் : துசி (எழிச்சி)
சிறந்த தொடராட்ட வீரன் : துசி (எழிச்சி)
இறுதியாட்ட நாயகன் : ஜெகன் (எழிச்சி)

உதைபந்தாட்டம்:

13 வயதின்கீழ்

முதலாம் இடம்: ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93

சிறந்த விளையாட்டு வீரர்கள்:

ஆகாஷ் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்)
கோபிசன்; (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)

இறுதியாட்ட நாயகன்:

டிலக்சன் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்)

15 வயதின்கீழ்

முதலாம் இடம்: ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்  
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93

சிறந்த விளையாட்டு வீரர்:

இந்துஜன் (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)

இறுதியாட்ட நாயகன்:

அனோஜ் (ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்)

வளர்ந்தோர்

முதலாம் இடம்: சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
மூன்றாம் இடம்: வல்வை பு@ஸ் விளையாட்டுக் கழகம்

சிறந்த விளையாட்டு வீரர்கள்:

பெனி (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்)
ஜோன்; (சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் 93)

இறுதியாட்ட நாயகன்:

சால்ஸ், தோமா (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்)

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)