img/728x90.jpg
வாசுதேவர் நேரு என்கிற மாவீரனின் மரணம்.

வாசுதேவர் நேரு என்கிற மாவீரனின் மரணம்.

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும்/ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற் புலிகளுக்கு முன்னதான கடல் வழங்கலில் ஈடுபட்டவரும்/ 'வெளிச்சவீடு' இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் நேரு அண்ணா கொரோனா தாக்கத்திற்குள்ளாகி எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
ஈழப் போராட்டத்தின் ஒரு காலகட்டச் சாட்சியம் இவர்.
இந்த இழப்பை எப்படிக் கடந்து செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை.
நிலைகுலைந்து போய் நிற்கிறோம்.
 - பரணி கிருஷ்ணாரஜனி -

நேரு என்கிற மாவீரனின் மரணம்

அன்பானவனே...
இரண்டு வாரமாக உன் குரலைக் காணவில்லை.
நலமாய் இருப்பாயென்று நினைத்தேன்.
நீ...கொரோனாவால் மரணித்தாய் என்கிற துயரச்செய்தியை 'பரணி' சொன்னபோது, நிலைகுலைந்து போனேன்.
விடுதலையை உயிராய் நேசித்த வல்வை மைந்தனே, உன் குரலை மறுபடியும் கேட்பேனா?.
தமிழினத்தின் வீரவரலாற்றுச் சுவடிகளில், நீ எழுதிச் சென்ற பக்கங்களும் நிச்சயம் இடம் பெறும்.
நீங்களே வரலாற்றின் நாயகர்கள்.
சென்று வா தோழா.
- இதயச்சந்திரன்-