• :
  • :
களத்தில்

பெல்ஜியத்தில் சிறிலங்கா சுதந்திர நாள் தமிழர்களுக்கு கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெல்ஜியத்தில் சிறிலங்கா சுதந்திர நாள் தமிழர்களுக்கு கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 70 ஆவது ஆண்டு சுதந்திர நாள்.

தமிழ் மக்களுக்கு இது 70 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தி பெல்ஜியம் Antwerpen மாநிலத்தில் 04/02/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்து நடைபெற்றது.

சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசிக் கொன்றும், அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்தும், அங்கு வாழும் ஈழத் தமிழர்களையே அழித்துவரும் இன ஒடுக்கல் கொள்கையை, சிறிதும் கூச்சநாச்சமின்றி பின்பற்றியும் வருகிறது இந்த கொடிய அரசு.
 
தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று அனைத்து தமிழ் மக்களும் உறுதி எடுத்துக் கொன்றனர்.