பரிசின் புறநகர்ப் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற செல் தமிழ்ச் சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா !

பரிசின் புறநகர்ப் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற செல் தமிழ்ச் சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா !

சிறப்புற இடம் பெற்ற செல் தமிழ்ச் சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா !

பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான செல் பிராந்திய செல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.2018) காலை 10.00 மணி தொடக்கம் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை முக்கிய பிரமுகர்கள் ஏற்றி வைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச் சோலைகீதம் அரங்கம் நிறைந்த மாணவர்களால் இசைக்கப்பட்டது.

நிர்வாகி செல் தமிழச் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

அரங்க நிகழ்வுகளில் பாலர் பிரிவில் இருந்து சகல பிரிவுகளையும் சேர்ந்த 220 மாணவர்கள் நடனம், பட்டிமன்றம், நாடகம், கூத்து என பங்குபற்றிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் உரையாற்றிய தலைவர் தமது சங்கத்தின் செயற்பாடுகளில் அக்கறையுடன் ஈடுபடும் அனைவரும் தேசிய நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் என்தை வலியுறுத்தியதுடன், நிகழ்வில் கிடைக்கப் பெறும் நல்வாய்ப்பு சீட்டிழுப்புப் பணம் தாயக உதவிக்கே பயன் படுத்தப் படும் என்பதையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் செல் பிராங்கோ தமிழ்ச் சங்கம் பிரான்சில் செயற்படும் தமிழ்ச் சங்கங்களின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சங்கங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று தடவை அதிதிறன் பெறுபேறுபெற்ற மாணவர்கள், மற்றும் மணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

தரம் 12 வரை தமிழ் கற்றலை பூர்த்தி செய்த மாணவர்களும், உயர்தரப் பரீட்சையில் தமிழை ஒரு துணைப்பாடமாகக் கொணடமாணவர்களும் மதிப்பளிக்கப் பட்டனர்.

வன்னி மயில் விருது 2018 ஐ தனதாக்கிக் கொண்ட செல் தமிழ்சேலை மாணவி சிவசுப்பிரமணியம் சபித்தாவும், அவரது நடன ஆசிரியரும் மதிப்பளிக்கப்பட்டதுடன். செல் தமிழ்சங்க தலைவரால் சிவசுப்பிரமணியம் சபித்தா தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப் பட்டதுடன், வன்னிமயில் போட்டியில் வெற்றி பெற்ற பாடலுக்கான நடனமும் அரங்கேற்றப்பட்டது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் திருமதி அரியரட்ணம் நகுலேஸ்வரி அவர்களின் உரையும் இடம் பெற்றது.

செல் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்ததிலிருந்து கடந்த இருபது வருடமாக செயற்பட்டுவரும் ஐவரில் நால்வர் மதிப்பளிக்கப்பட்டனர்.