• :
  • :
களத்தில்

டென்மார்க்கில் தமிழர் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட பூப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் சிறிலங்கா கொடி

டென்மார்க்கில் தமிழர் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட  பூப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் சிறிலங்கா கொடி

டென்மார்க்கில் தமிழர் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட  பூப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் சிறிலங்கா கொடி

டென்மார்க்கில் உலகத் தமிழர் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட  பூப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் சிறிலங்கா கொடியை அனுமதிக்கப்பட்டதானது.

இந்த தமிழ் அமைப்பானது  சிறிலங்கா அரசினால் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினஇனப்படுகொலைக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அமைகிறது. அத்துடன் 40.000 இற்கு மேற்பட்ட மாவீரர்கள் செய்த வீரத் தியாகங்களையும், மக்களையும்  இழிவுபடுத்துவதாகவும் இருப்பது டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும்மனவருத்தத்தையும், வேதனையையும்   ஏற்படுத்தி இருக்கின்றது.
 
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆழமான அரசியல் போராட்டத்தில் எதிரியின் உள்நோக்கங்களை புரிந்து கொண்டு உலகத்தமிழர் பயணிக்க வேண்டும்.
 
இது வரை சிறிலங்கா அரசு தான் செய்த கொடூரங்களை நியாயப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள் முறியடித்து வருகின்ற நிலைமையில் புதுப்புது யுக்திகளை எதிரி கையாளுகின்றான்.அதை தமிழர்கள் ஆகிய நாம் விளங்கி கொள்ளவேண்டும்.
 
இதனை நேர்த்தியாக புரிந்து கொள்ளாமல், இது ஒரு விளையாட்டு நிகழ்வு என்று நினைத்தோமேயானால் 30வருட தமிழீழ விடுதலைப்போராட்டமும், எமது இனத்தின் விடுதலையும், விளையாட்டாக அமைந்து விடும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.