img/728x90.jpg
மக்களுக்காக களத்தில் இறங்கி என்னால் முடிந்தவரை மக்களுடன் நின்று குரல் கொடுத்துவருகின்றேன்! - எஸ். வியாளேந்திரன்

மக்களுக்காக களத்தில் இறங்கி என்னால் முடிந்தவரை மக்களுடன் நின்று குரல் கொடுத்துவருகின்றேன்! - எஸ். வியாளேந்திரன்

மக்களுக்காக களத்தில் இறங்கி என்னால் முடிந்தவரை மக்களுடன் நின்று குரல் கொடுத்துவருகின்றேன்! - எஸ். வியாளேந்திரன்

தென்தமிழீழம், இங்கு வருகின்ற சில அமைச்சர்களுக்கு பின்னால் வால்பிடித்து திரியும் சிலர் எம்மை நோக்கி கை நீட்டுவதும் சில கதைகளை திரித்துக் கூறுவதும், பொய்யான கதைகளை மக்கள் மத்தியில் சொல்லி திரித்து சொல்வதும் வேடிக்கையாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்

தன்மீது சில அரசியல்வாதிகள் அவதூறு குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி திரிவது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை புறந்தள்ளி இங்கு வருகின்ற அமைச்சர்களுக்கு பின்னால் வால்பிடித்துத் திரியும் சிலர் என்னை நோக்கி சில விடயங்களை பொய்யான கதைகளை மக்கள் மத்தியில் சொல்லி திரிகின்றனர்

நல்லாட்சிக்கு முண்டு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான எந்தவிதமான அங்கீகாரங்களையும் அரசாங்கம் வழங்காது தமிழ் மக்களை அவர்களது சொந்த தாயக நிலத்திலேயே இரண்டாந்தர பிரஜைகளாக நடத்துகின்ற நிலையில் இனிமேலும் நாம் அரசு‌க்கு ஆதரவு வழங்குவதை விடுத்து மக்களுக்காக களத்தில் இறங்கி என்னால் முடிந்தவரை மக்களுடன் நின்று குரல் கொடுத்துவருகின்றேன்

இதை பொறுத்துக்கொள்ளாத சில அரசியல்வாதிகள் என் மீது சேறு பூசி, பொய்களை கூறி என்னை ஓரங்கட்ட நினைக்கின்றனர் அது ஒரு காலமும் நடக்காது

சிலர் அமைச்சர்களுடன் நெருங்கிச் செல்லவே விரும்புகின்றனர். ஆனால் நான் மக்களிடம் நெருங்கி செல்லவே விரும்புகின்றேன் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். சிலர் அதையும் முதலமைச்சர் பதவிக்காக செயல்படுவதாக கூறுகின்றனர். உண்மையில் கிழக்கு முதலமைச்சர் என்பதெல்லாம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்னதான் அதி கூடிய வாக்குகளை பெற்றாலும் அது குறித்து தீர்மானிப்பவர்கள் சிலரே

எனவே கிழக்கு முதலமைச்சராக ஒரு தமிழர் வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் நான் முதலமைச்சராக வர முயற்சிக்கின்றேன் என்பதெல்லாம் அரசில் தெரியாதவர்கள் கூறும் கட்டுக்கதைகள்

மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றும் என்போன்ற சிலரையும் அரசியலுக்காக தான் பணியாற்றுகின்றோம் என்று சேறு பூசி தமிழ் மக்களுக்காக ஒலிக்கும் குரல்களை நசுக்க தமிழ் அரசியல் வாதிகளே துணைபோகின்றனர்

என் தமிழ் மக்களோடு மக்களாக நான் உள்ளேன். என் மக்களுக்கு பிரச்சினை நடக்கும் இடங்களுக்கு உடன் சென்று அவர்களோடு களத்தில் நின்று அவர்கள் உரிமைக்காக போராடுகின்றேன்

அண்மையில் காணி, புல்லுமலை குடிநீர்ப் பிரச்சினைகள் தொடர்பாக நடந்த போராட்டங்களில் மக்களோடு நின்றேன். அந்த நேரம் அமைச்சர் வந்த போது அவருக்கு பின்னால் வால்பிடித்து திரிந்த சில அரசியல்வாதிகள் தங்களை மக்கள் மத்தியில் நல்லவர்களாக இனங்காட்ட இரட்டை அர்த்தத்தில் பேசுகிற கேவலம் சில காலங்களாக நடைபெறுகிறதுஊழலை புரிபவன் தான் அடிக்கடி ஊழல் பற்றி பேசுவான். தைரியமான அரசியல்வாதியாக இருந்தால் பெயர் சொல்லி பேசட்டும். தன் பிழையை மறைக்க மற்றவர்கள் நோக்கி கை நீட்டுவதும், அடுக்கு மொழியில் பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதும் முதுகெலும்பு இல்லாத, கையாலாகாத் தன்மையின் ஒட்டு மொத்த வெளிப்பாடு இன்று அரசியலில் இருந்தாலும் சொந்த உழைப்பை கைவிடாமல் உழைத்து அந்த உழைப்பில் வாழ்பவன். அரசனை நம்பி புருசனைக் கைவிட்டவன் நான் அல்ல. என் மக்களுக்காக யாருக்கும் பயப்படாமல் துணிகரமாக களத்தில் நின்று போராடுபவன்

தைரியம் இருந்தால் களத்துக்கு வர வேண்டும். பெயரை வெளிப்படையாகச் சொல்லி பேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு குத்துப்பாட்டாக பேசும் பேச்சுக்களை உடன் நிறுத்த வேண்டும்

இல்லாது விடின் நான் தைரியமாக பெயரைச் சொல்லி பேச வேண்டிவரும். எவருக்கும் கழுவி, துதி பாடி, அமைச்சுக்கள் வந்தால் வால் பிடித்து திரிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவ்வாறு திரிபவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்

எந்த அமைச்சின் செயற்பாடுகளையும் தான் கொண்டு வருவதாக கூறி தம்பட்டம் அடிப்பவனும் நானல்ல. எந்த அமைச்சரையும் நாடி எங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. அது அமைச்சர்களுக்குப் பின்னால் திரிபவர்களுக்குப் பொருந்தும். மற்றவர்களின் நல்ல குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். இதோடு நிறுத்தாவிட்டால் பல விடயங்களை ஆதாரத்துடன் பேச வேண்டி வரும்

மக்கள் போராட்டத்தில் நிற்பதை பொடி வைத்துப் பேசி, குழப்பி வேறு திசைக்கு திருப்ப நினைக்கும் வங்குரோத்து அரசியலை நிறுத்த வேண்டும். அவ்வாறு பேசுவதால் நல்லவராகி விடமுடியாது நான் தமிழ் மக்களின் காணி பறிபோவதை தடுக்க முற்படும் போது அதை மாற்று இனத்திடம் காட்டிக்கொடுத்து என்னை இனவாதியாக காட்டி தங்களை நல்லவர்களாக சகோதர இன அமைச்சர்களிடம் இனம் காட்டி சலுகைகளை பெறவே முயற்சிக்கின்றனர்

அவர்களுக்கு காணி பறிபோவதோ தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதோ, தமிழர்களின் பதவி பறிபோவது குறித்தோ கவலை இல்லை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுடனான உறவு கெட்டுவிடக் கூடாது அதுதான் அவர்களது கவலை அதற்காக எதையும் பேசுவார்கள். இத்துடன் குத்துப்பாட்டுக் கதைகளை நிறுத்த வேண்டும் . இல்லாது விடின் பெயர்கள் சொல்லி ஆதாரத்துடன் பேச வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்