• :
  • :
களத்தில்

ஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக - இது இருளின் இசை - இறுவெட்டு வெளியீட்டு!

ஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக -  இது இருளின் இசை -  இறுவெட்டு வெளியீட்டு!

ஜுலை கலவரத்தினை ஆவணப்படுத்தும் நோக்கில் ‘இது இருளின் இசை’ என்ற இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 
ஜுலை கலவரத்தினை ஆவணப்படுத்தும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை பண்பாட்டு பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இறுவெட்டில் ஜுலை கலவரம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்கள் மற்றும் அது ஏற்படுத்திய பாதிப்புக்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர்கள், அக்கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
 
1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வெலிப் பகுதியில் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தமையை தொடர்ந்து தென்னிலங்கையில் சிங்கள இனவெறிக் காடையர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன ரீதியான வன்முறையில் சுமார் நுாற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததோடு இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுடன், கோடிகணக்கான சொத்திழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
 
ஜுலை 23 ஆம் திகதி தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் வடக்கு, கிழக்கில் விடுதலை போராட்டத்தினை வீரியமடையச் செய்திருந்ததுடன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.