• :
  • :
களத்தில்

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

 
செஞ்சோலை படு கொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று (14/08/2018) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
 
14/08/2006 அன்று முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இங்கை விமானப்படை நடாத்திய தாக்குதலில் 52 சிறுவர்கள் உட்பட 61 பேர் படு கொலை செய்யப்பட்டதுடன் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
தமிழ் மக்களின் வரலாற்றில் ஒன்று இந்த தமிழ் சிறுவர்கள் மீதான மிக கொடூரமாக நடாத்தப்பட்ட படுகொலை தான் செஞ்சோலை சிறுவர்களின் படுகொலையாகும்.
 
தமிழ் மக்களின் வரலாற்றில் இவ்வாறான படுகொலைகள் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.
 
ஆனால் உலகிலுள்ள மனிதநேய அமைப்புக்கள் மனிதாபிமான குழுக்கள் சிறுவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற யுனிசப் நிறுவனம் போன்றவைகள் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு எது விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட வில்லையென்பது தமிழ் மக்களின் வாழ்வில் இடம் பெற்ற சோக வரலாறாகும்.
 
தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் இன்னும் தொடர்ச்சியாகவே எங்களது தமிழர் தாயக தேசத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
இவ்வாறான படுகொலைகளை கண்டும் காணாமல் இருப்பதுதான் இந்த பொது அமைப்புக்களின் நிலையாக இருக்கின்றது.
 
தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற ரீதியில் எந்தவொரு தரப்பும் செயற்பட வில்லை என்பது தான் இவ்வாறான படுகொலைகள் தொடர்ச்சியாக இடம் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றது.
 
இந்த படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைபெற்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் பட்சத்திலேயே எங்களது மக்களுக்குரிய நீதியான விசாரணைகள் நடைபெற்று அதற்கான தீர்வு கிடைக்கும்.
 
அதை விட்டு விட்டு தமிழ் மக்களுக்கு வெவ்வேறு விதமான முயற்சிகளிலே தீர்வுகள் காணப்படலாம் என்ற அடிப்படையிலே செயற்படுவோமாக இருந்தால் நாங்கள் இந்தப் படுகொலைகளை மேலும் மேலும் சந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.
 
எனவே தமிழ் மக்கள் சரியான ஒர நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்றைக்கு வடக்கு கிழக்கு பூராகவும் தலைமைத்துவ போட்டிகளும் பதவிப் போட்டிகளும் பதவி ஆசைகளும் தமது குடும்பம் சார்ந்த செயற்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
தமிழ் மக்களின் தலைவர்கள் என சொல்லப்படுகின்றவர்கள் தாங்கள் ஏதோ செய்யப் போவதாக கூறிக் கொண்டு தங்களின் நலன் சார்ந்தே செயற்படுவதுடன் இந்த அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டும் பிழைப்பை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
 
அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என சிலர் வட கிழக்கு பூராகவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் செல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
 
ஆனால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்படுத்தும் விதமாகவே அந்த அரசியல் சாசனம் இருக்கின்றது.
 
ஆனால் தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கின்ற அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்கின்ற எதுவும் அதில் காணப்பட வில்லை.
 
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற ரீதியில் கருத்துக்களை வெயியிட்டும் தமிழ் வாக்குகள் சிதறக் கூடாது ஒருமித்து அழிக்க வேண்டும்.
 
சரியோ பிழையோ முதலமைச்சர் தமிழராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
 
மக்கள் கடந்த காலங்களை திரும்பி பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழருக்கு கிடைக்க வேண்டுமென்பதில் எது வித மாற்றுக்கருத்தும் எம்மிடமில்லை.
 
ஆனால் முதலமைச்சர் பதவி கிடைத்தால் இங்கு நடைபெறுகின்ற தமிழர்களின் காணி அபகரிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பது தான் எங்களுடைய கேள்வியாகும்.
 
அதை விட்டு விட்டு வெறுமனே முதலமைச்சர் பதவிக்காக மட்டும் போராடி முதலமைச்சர் பதவியை பெற்று விட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் தமிழ் மக்கள் விரும்பும் எல்லாம் கிடைத்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
 
முதலமைச்சர் பதவியில் ஒன்றுமில்லை வடக்கிலே நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றார்.
 
அவர் சட்ட ரீதியாக பல விடயங்களை அனுகுகின்றார் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை எடுத்துக் கூறுகின்றார்.
 
ஆனால் எல்லா அதிகாரமும் ஆளுனரிடம் இருப்பதால் அவரின் அடுத்த கட்டத்திற்கு போக முடியாத சூழ் நிலை காணப்படுகின்றது.
 
தமிழ் மக்களின் கடந்த கால அனுபவங்களையும் வரலாறுகளையும் கருத்திற் கொண்டு நாங்கள் நிரந்தரமான தீர்வை அடையக் கூடிய ஒரு தலைமைத்துவத்தை எதிர் காலத்தில் தெரிவு செய்ய வேண்டும்.
 
அதற்கான ஒரு மாற்றுத் தலைமைதான் தமிழ் மக்களுக்கு இன்று தேவையாக இருக்கின்றது.
 
வரும் தமிழ் தலைமைகள் எல்லாம் அரசோடு ஒட்டி இயங்குகின்ற பேரம் பேசி இயங்க முடியாத முள்ளந்தண்டற்ற தலைமையாக இருப்பதனாலேயே தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்ட முடியாத சூழ் நிலை காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.