திருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

திருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

 திருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!  

 
திருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு நாள் மற்றும் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 09 ஆம் திகதி திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள நினைவுத்தூபியில் மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் நினைவுகூரப்பட்டது.
 
இதன் போது முதலில் 2005 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளால் கௌசல்யன் உட்பட வீரவேங்கைகளுடன் படுகொலை செய்யப்பட்ட 
நாட்டுப்பற்றாளனும் முன்னாள் பா.உ உறுப்பினருமான
அரியநாயகம் சந்திரநேருவின் சமாதிக்கு அவரது மனைவி திருமதி சந்திரநேரு அகல்விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் 2002 ஆம் ஆண்டு காஞ்சிரங்குடா பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது படுகொலை செய்யப்பட்ட 07 பாடசாலை மாணவர்களது நினைவு தூபிக்கு அவர்களது பெற்றோர்களால் அகல்விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அன்றைய தினம் திருக்கோவில் பகுதி மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது அங்கு ஒன்றுகூடிய மக்கள் அனைவரும் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படையினரின் காவல் நிலையம் வரை சென்றிருந்தனர் அந்த சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்காக படையினர் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தினர் அங்கு போராட்டத்திற்கு கலந்து கொண்டிருந்த மாணவர்கள் 7 பேர் இலக்காகி கொல்லப்பட்டனர். அப்பாவி மாணவர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்றுகூட தெரியாமலே உயிரை விட்டனர் ஆனால் இன்றுவரை அதற்கு நீதி கிடைக்கவில்லை என இரங்கல் உரையின் போது சம்பவத்தை நேரில் கண்ட பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.