• :
  • :
களத்தில்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை தீருவில்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை தீருவில்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை தீருவில்

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் வெளியில் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிகளின் நினைவிடம் உள்ள இடத்தில் மாவீரர் தினம் எழுற்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரர் ஒருவரின் தந்தை நடராசா செல்வச்சந்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்

வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் துயிலும்இல்லத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் மற்றும் கொடிகளை பறக்கவிடுவதற்கும் வல்வெட்டி துறை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இதனால்மக்கள் தமது கையடக்க தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்கவிட்டு அஞ்சலிசெலுத்தியுள்ளனர்.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மாவீரர்களான தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களை வைத்து மலர் மாலைகள் சூட்டி தீபமேற்றி வணக்கம் செலுத்தினர். இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தமது பிள்ளைகளுக்கு கண்ணீருடன் வணக்கம் செலுத்தினர்.