img/728x90.jpg
img/728x90.jpg
ஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்

ஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்

ஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்

எந்த விபரமும் தெரியாத தன் கவணரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அவரை உடனடியாக பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும், அல்லது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பிள்ளைகளும் தாயும் இன்று காலையிலிருந்து மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்காவில் கணவருக்கு நீதி கிடைக்கும்வரை உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த 29.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் காவலரணில் வைத்து இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கதிர்காமத்தம்பி-இராசகுமாரன் (அஜந்தன்) என்பவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான விசேட அனுமதியைப் பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இவரால் பொலிசார் சுட்டுக்கொல்லப்படவிலலை என்ற விடயத்தை உறுதிப்படுத்திய புலனாய்வுப் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவரை அடையாளம் காட்டுமாறு கேட்டே தடுத்து வைத்துள்ளனர்

அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அஜந்தன் எனப்படும் சி.ராஜகுமாரனின் மனைவி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த செய்தியை மனித உரிமை அமைப்புகளுக்கும் சர்வதேச சமூகத்திடமும் எடுத்து செல்வோம்..

முன்னாள் போராளியின் மனைவியினதும் பிள்ளைகளினதும் நலனில் அக்கறை கொண்ட சமூக தொண்டர்கள் இரவு பகல் பாராது ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

குறித்த போராளியின் கைது தொடர்பாக அவரது மனைவி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மட்டுமே கூறுகின்றார்..

தனது கணவர் அப்பாவி என்று போராடும் அவரது கையில் 45 நாள் குழந்தை உள்ளடங்கலாக 5 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடதக்கது.

மத தலைவர்கள் பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் அவரது துன்பத்தை உணர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூறி செல்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது...

இது தொடர்பாக சட்டத்தரணிகள் உதவ முன்வருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இது போல் முன்னாள் போராளிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கும் அரசியல் கைதிகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு உதவ மனித நேய சட்டத்தரணிகள் முன்வர வேண்டும்!

Video