• :
  • :
களத்தில்

உடுத்துரை சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தி கதறி அழுத உறவினர்கள்!

உடுத்துரை சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தி கதறி அழுத உறவினர்கள்!

உடுத்துரை சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தி கதறி அழுத உறவினர்கள்!

இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை சுனாமி நினைவாலய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அந்த வகையில் வடமராட்சி கிழக்கு உடுத்துரை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை சுனாமி நினைவு நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இங்கு பெருமளவான மக்கள் கூடி காலை 9.25 மணிக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தமது உறவுகளை நினைத்து கதறி அழுதனர். 14 ஆண்டுகள் கடந்தாலும் இன்றுவரை உறவுகளின் நினைவுகளை சுமந்து வாழும் சொந்தங்களை கல்லறைகளை கட்டியணைத்து கதறும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன.

வடமராட்சி கிழக்கில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆழிப் பேரலையால் கொல்லப்பட்டனர். இவர்களில் 700 இற்கு மேற்பட்டோர் உடுத்துறை நினைவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.