• :
  • :
களத்தில்

பெரியநீலாவணை இளைஞர்களால் வன்னி உறவுகளுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு !

பெரியநீலாவணை இளைஞர்களால் வன்னி உறவுகளுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு !

பெரியநீலாவணை இளைஞர்களால் வன்னி உறவுகளுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு !

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான மனிதநேயப்பணியாக பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களால் இன்று (25/12/2018) இக்கிராமத்தில் உலர் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
 
இளைஞர்களால் மிகவும் ஆர்வமாக மேற்கொண்ட நிவாரண சேகரிப்பு பணியின் பயனாக பெரியநீலாவணை கிராமத்தில் அண்ணளவாக இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் ஒரே நாளில் சேகரிக்கப்பட்டுள்ளன.
 
இந்தப் பொருட்கள் 26/12/2018 இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டு, பிரதேச செயலகம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.