img/728x90.jpg
கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக...! - ஜீ.ஜெ. பிரகாஸ்

கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக...! - ஜீ.ஜெ. பிரகாஸ்

கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக...! - ஜீ.ஜெ. பிரகாஸ்

மதிப்புக்குறிய அரச அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் , சட்டத்தரணிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் வருத்தத்துடனான வணக்கங்கள்!
 
எம் தமிழ் சமூகம் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பலரை இழந்துள்ளது. சிலர் எம் மண்ணைவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர், சிலர் அரசியல் கைதிகள் என்கின்ற போர்வையில் சிறைகளில் தம் வாழ்நாட்களை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் இன்னும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
 
இவற்றினால் நாம் இழந்தவை உரிமைகள், உயிர்கள் , உடைமைகள் மற்றுமல்ல எம் இளந்தலைமுறையினர் பலரையும் இழந்துள்ளோம் இன்றும் அரசியல் காரணங்களுக்காகவும் இனந்தெரியாதோரால் இழந்துகொண்டுமிருக்கின்றோம். இதற்கு எம் கையாளாகாத அரசியல் தலைமைகள் மற்றும் இந்த அரசாங்க கட்டமைப்பு எம்மினத்தவர் சார் கொண்டுள்ள பாராமுகமும் முக்கிய காரணங்கள்.
 
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் தமிழ் உணர்வாளர்கள் குறிப்பிட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை நாமனைவரும் அறிந்ததே. பொதுவில் எமது சமூகத்தினை நோக்கி இரத்த ஆறு ஓடும் என சவால் விட்ட ஒரு நபர் எமது இனத்தவர் செறிந்து வாழும் பகுதிக்கே ஆளுநராக நியமிக்கப்பட்ட அதேவேளை தமிழ் மக்களுக்கெதிரான அநீதிகளை தட்டிக்கேட்க நினைத்த உணர்வாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்ட மேற்கூறிய தீர்ப்பு எந்தவகையில் நியாயமானது? இது ஒரு புறமிருக்க கடந்த ஞாயிறு (21.04.2019) நடைபெற்ற அசம்பாவிதத்தில் நாம் இதுவரை 259 மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கின்றோம். இன்னும் பலர் அங்கங்களை இழந்துள்ளனர்.
 
இதன் பாதிப்பு இன்னும் எத்தனை பேரை எதிர்காலத்தில் உடல் உள ரீதியாக பாதிக்கவுள்ளது என்பது காலத்தின் கையில் உள்ளது. இதில் நாம் 45 குழந்தைகளையும் இழந்துள்ளோம். அதாவது நாளைய எம் நாட்டின் தலைவர்கள் இவர்கள். நாற்பத்தைந்து சந்ததியினர் இவர்கள். அதில் மூன்றிலொன்று (இதுவரை 14) எம் மட்டக்களப்பு மண்ணின் குழந்தைகள்.
 
இலங்கையின் கண்கட்டு அரசியலுக்கும் இனவெறியர்களது மூர்க்கத்தனத்திற்குமான பலிகள் இவர்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் ஒரு விரல் துண்டாகி அது அழும் போது நீங்கள் அருகில் இருந்திருக்கின்றீர்களா? நாம் எம் குழந்தைகளை ஐந்து நாட்களுக்கு முன்னர் கருகிய சடலமாகவும் சதைக்குவியலாகவும் எம் கைகளில் ஏந்தி மண்ணுக்குள் புதைத்திருக்கின்றோம். 
 
கடந்த சில நாட்களிலான புலனாய்வு மற்றும் கைதுகளில் எம் மட்டக்களப்பு பகுதியில் ஊடுருவியுள்ள தீவிரவாதம் குறித்து வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்ற தகவல்கள் எமக்கு அதிர்ச்சியானவை என்பதல்ல. கடந்த கால நடைமுறைகளில் ஒருவகையில் நாம் எதிர்பார்த்தவையே. ஆயினும் அது உயிர்ப்பலியில் முடிந்திருப்பதே எமது பெரும் கவலை.
 
அதேவேளை இனிமேலும் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு எம் இன உயிர் மட்டுள்ள எந்த மனித உயிரும் பலியாக கூடாது என்பதால் நாம் இனிமேலும் மௌனம் சாதிக்க தயாரில்லை. கையாளாகாது இருக்கவும் தயாரில்லை.
 
கிழக்கினை பொறுத்தளவில் அரச மட்டத்தில் மட்டுமல்ல நிர்வாகம் நீதிமுறைமை மற்றும் வர்த்தகம் அனைத்திலும் தகுதி என்பதினை தாண்டி ஊழல் ஊடாகவும் முஸ்லீம் சமூகத்தினர் பதவி வகிக்கின்றனர். ஆளுநர் உட்பட பலரும் எம்மினத்தவர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வு குறித்தும் தமது பதவிகள் மற்றும் பொருளாதார செல்வாக்கினை பயன்படுத்தி தமிழர் மீது ஆதிக்கம் செலுத்தவும் எம்மிருப்பினை அழிக்கவும் முயல்வது கடந்த சம்பவத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆளுநர் கிஸ்புல்லா குறிப்பிட்டதை போன்று இரத்த ஆறாக எம் மட்டுநகரின் வாவி மாறும் காலம் தூரத்தில் இல்லை என்பது எமக்கு புரிந்திருப்பதை போன்று உங்களுக்கும் புரிந்திருக்கும். இனியாவது விழித்துக்கொள்வோம். 
 
ஆகவே நாம் தயவுடனும் பலியாக்கப்பட்ட எம்மின உயிர்களது சார்பாகவும் உங்களை கேட்டுக்கொள்வது யாதெனில் இன்னும் தாமதியாது இந்த கட்டமைப்பினை மாற்ற ஒன்றிணைவோம். இனவாத அரசியல் அன்றி மனித தன்மையுள்ள தலைமைகள் எம் கிழக்கு மண்ணில் நியமிக்கப்பட வேண்டும். அதுவும் பிரதிநிதி என்பவர் மக்களது கருத்துக்களை உரிமைகளை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்பவர் என பொருள்படுமாயின் எமக்கான பிரதிநிதியும் மக்கள் விகிதாசார அடிப்படையில் எம்மினத்தவராக நியமிக்கப்பட வேண்டும்.
 
இது காலத்தின் கட்டாயமும் கூட. வன்முறை பேச்சாளர்களும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுமன்றி எம்மை தகுதி மற்றும் மனிதாபிமானம் கொண்ட ஒருவர் ஆளவேண்டும். இதற்கு உங்கள் சார் உதவிகளையும் கருத்துக்களையும் சட்ட அனுகுமுறைகளையும் வேண்டி நிற்கின்றோம். ஏனெனில் எம்மிடம் இனியும் இழப்பதற்கு உயிரன்றி வேறெதுவுமில்லை.
 
கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக
 
ஜீ.ஜெ.பிரகாஸ்
26/04/2019