img/728x90.jpg
img/728x90.jpg
இலங்கை நீதித்துறையின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள்

இலங்கை நீதித்துறையின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள்

ஒருபுறம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுப்பதோடு அவர்கள் மீது கொடூரமான தண்டனைகளை நீதிமன்றம் மூலம் ஏவி விடும் வேலைகளை இலங்கை அரசு செய்து வருகிறது .அண்மைக்காலங்களில் போர்குற்றச்சாட்டுகள் கூட சுமத்தப்படுகிறது

மறுபுறம் இலங்கை ராணுவத்தினரை பலவேறு வழக்குகளில் இருந்து விடுவித்து வருகிறது .பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கு தொடக்கம் இன்றைய திருகோணமலை மாணவர் படுகொலை வழக்கு வரை பலவேறு வழக்குகள் இதற்க்கு சான்று

2006 தை மாதம் இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் மனோகரன் ரஜீகரன், யோகராஜா ஹேமசந்திரன், லோகித ராஜா ரோகன், தங்கதுரை சிவநாதன், சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களை சுட்டு படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைப் படையினர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டு இருக்கிறார்கள் .இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை நீதிமன்றம் சொல்லி இருக்கிறது

இலங்கை நீதித்துறை சுயாதீனமானது வக்காலத்து வாங்கும் தமிழ் பெருங்குடி மக்கள் இனியாவது இந்த உண்மைகளை புரிந்து கொள்ள முன்வர வேண்டும் . உள்நாட்டு விசாரணையை கலப்பு விசாரணை என கதை பேசுபவர்கள் , சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என அறிக்கை விடுபவர்கள் என பலரும் இனியாவது இலங்கை நீதித்துறையின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைளை புரிந்து கொள்ள வேண்டும்