img/728x90.jpg
சர்வதேச காணாமல் போனோர் தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச காணாமல் போனோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று(புதன்கிழமை) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்போது கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், ‘சர்வதேச காணாமல் போனோர் தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கு இணைந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்தில் பன்றிகெய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஒமந்தை சோதனை சாவடியில் முடிவடையும்.
பொது மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள்,பொது அமைப்புக்கள்,வர்த்தக சங்கங்கள்,சமூக சேவை ஆர்வலர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் இளைஞர்கள்,யுவதிகள் அனைவரும் எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

விமர்சனம் செய்யும் போராட்டமாக இதை யாரும் கொச்சைப்படுத்தாமல், எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.