img/728x90.jpg
img/728x90.jpg
பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி

பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று 2019.08.30 கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் நீதிக்கான பேரணி இன்று மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பேரணி நடாத்தப்பட்டது

இப்பேரணியானது காலை 11.00 மணியளவில் கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பித்து மட்டுநகர் காந்தி பூங்காவரை சென்றடைந்து ஐநா சபைக்கான
மகஜர் ஒன்றும் இலங்கை மனிதவுரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் அதிகாரியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கையளித்தலுடன் சுமார் 12.00 மணியளவில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், தமிழ் மக்கள் நலன் காப்பகத்தின் பிரதிநிதிகள் ,அரசியல் கட்சியின் பிரதிநிதிகளென ஏராளமானோர் பங்கு கொண்டிருந்ததோடு.

01.OMP வேண்டாம்

02.பன்னாட்டு நீதிப்பொறிமுறையே வேண்டும்

03.பன்னாட்டு நீதிவிசாரணையானது பன்னாட்டு குற்றவியல் ( ICC ) நீதிமன்றத்தினூடாக நடைபெறவேண்டும்

04.எங்கே எங்கே உறவுகள் எங்கே

05. ஏமாற்றாதே ஏமாற்றாதே சர்வதேசமே ஏமாற்றாதே

போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.