img/728x90.jpg
img/728x90.jpg
தமிழ் இனப்படுகொலை செய்த கோத்தாபாயவிற்கு தமிழ் இளையோர் வெட்கம் மின்றி் தேர்தல் பிரச்சாரம்

தமிழ் இனப்படுகொலை செய்த கோத்தாபாயவிற்கு தமிழ் இளையோர் வெட்கம் மின்றி் தேர்தல் பிரச்சாரம்

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா(டி) நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! – நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! – அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! – அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! – அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

-காசி ஆனந்தன் கவிதை-