img/728x90.jpg
வடக்கு மற்றும் கிழக்கில்  நிலை கொண்டிருக்கும் சிங்கள இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கில் நிலை கொண்டிருக்கும் சிங்கள இராணுவ மயமாக்கலின் பரிமாணங்கள்!

வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவம் இராணுவமயமாக்கலை சாதாரணமயமாக்கும் முயற்சியை கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. 

Image result for இராணுவமயமாக்கல்

இதற்காக இராணுவம் கையில் எடுப்பது

•பாடசாலை மாணவர்களுக்கு உதவி செய்வது.
•தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகள்(தீபவளி/நத்தார் போன்றவை) 
•இயற்கை அனர்த்தங்களின் போது உதவி செய்தல்
•வேலை வாய்ப்புக்களை வழங்கல்
•பௌத்த தின நிகழ்வுகளில் வறியவர்களுக்கு உதவி செய்வது.
•வீடு கட்டி கொடுப்பது, போட்டிகள் வைத்தல், என பல.

இவை அனைத்தையும் செய்வது வடக்கு மக்கள் மீதான பற்றுதலால் அல்ல, இலங்கை இராணுவம் மீதான தமிழ் மக்களின் வெறுப்பை குறைப்பதற்கும், நல்லெண்ணெத்தை ஏற்படுத்துவதற்கும் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதில் இராணுவம் படிப்படியாக வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். முன்னரெல்லாம் வடக்கின் இராணுவம் பற்றி அரசியல் வாதிகள், பத்திரிகைகள் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தன ஆனால் இப்போது இராணுவம் வடக்கில் என்ன செய்கின்றது என்பதே வெளியில் வருவதில்லை. 

அந்தளவுக்கு அவர்கள் தங்கள் நடவடிக்கைகளில் கவனமாக இருக்கின்றார்கள். மக்களோடு நெருங்கும் புரஜெக்டை செய்கின்றார்கள். அண்மையில் கூட மணல்கடத்தலை கட்டுப்படுத்த இராணுவம் முகாம் அமைக்க வேண்டும் என்று கிளிநொச்சியில் சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

Related image

இது தவிர தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்கள் கூட கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது இராணுவம் உதவி செய்த படங்களை முகநூலில் பகிர்ந்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூட பதிவு செய்திருந்தார்கள். 

இவை சாதாரணமாக நிகழ்பவை அல்ல, இராணுவமயமாக்கலின் விளைவு தான் இது. இவ்வாறு இராணுவத்திற்கு ஆதரவான கருத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே எழ வெளிக்கிட்டிருக்கின்றன. 

இவற்றுக்கு எதிர்வினையாற்றுவது தமிழ் தரப்புக்களிடம் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

குறிப்பாக 

•வெள்ள அனர்த்தங்கள்
•பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தல்
•தமிழர் பண்டிகைகளில் கலை நிகழ்வுகளை பொதுமைப்படுத்தல்.
•இலங்கை இராணுவம் மேற்கொண்ட படுகொலை நிகழ்வுகளை நினைவு கூரல்/ அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கல்.
•இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்கள் நினைவாக விழையாட்டு நிகழ்வுகளை நடாத்தி அதனை பொதுமக்கள் மத்தியில் சாதாரணப்படுத்தல். 

Image result for இராணுவமயமாக்கல்

Related image

இவ்வாறு அண்மைக்காலமாக இந்த எதிர் வினையாற்றல் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும் இந்த எதிர்வினையாற்றல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், தமழித்தேசிய மக்கள் முன்னண்ணி, சில ஆலயங்கள் என சிலரே செய்து வருகின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனக்கிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற பலத்தை வைத்து மேலும் செய்ய முடியும். 

Image result for இராணுவ மயமாக்கல்

50 வருடங்கள் சென்றாலும் இலங்கை இராணுவத்தின் குற்றங்கள் மனிதவுரிமை மீறல்களை நாங்கள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 

Related image

Related image

Image result for tamils genocide

Related image

Related image