• :
  • :
களத்தில்

மக்களின் போராட்டகுணத்தை மழுங்கடித்து மாற்றானுக்கு விலைபோன அரசியல்வியாதிகளினால் வந்த இழிநிலை.

மக்களின் போராட்டகுணத்தை மழுங்கடித்து மாற்றானுக்கு விலைபோன அரசியல்வியாதிகளினால் வந்த இழிநிலை.

அண்மையில் இனஅழிப்பு அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியான தீப்தி போகொல்லாகம தமிழர் தொன்ம நிலமான சூடைக்குடா பகுதியில் அமைந்துள்ள குன்றத்தூர் மத்தளமலை திருக்குமரன் ஆலயத்திற்குள் புகுந்து இனஅழிப்பு அரசின் காவல்துறை உதவியுடன் 
இன மோதலை தூண்டியது மட்டுமல்ல மத நல்லிணக்கத்திற்க்கு கேடு விளைவித்ததுடன் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தமிழர் வழிபாட்டை குழப்பியிருந்தார்.

உண்மையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது சூடைக்குடா கோவில் நிர்வாகத்தை சேர்ந்த மூன்று தமிழர்களை இன்று கைது செய்து இனஅழிப்பு அரசு சிறையில் தள்ளியிருக்கிறது.

இனஅழிப்பு அரசின் அதியுச்ச வெறியாட்டம் இது.

ஆனால் நல்லிணக்கம் பேசியபடி தேர்தலில் குதித்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் கண்ணுக்கு இது எதுவுமே தெரியவில்லை.

புத்தாண்டு பிறந்து எந்த நல்ல செய்தியும் கண்ணுக்கு தெரியவில்லை.

நாம் போராட்ட வழிமுறைகளை மாற்றாதவரை எதுவுமே மாறப்போவதில்லை.

- பரணி க்ரிஷ்ணராஜனி -