img/728x90.jpg
மட்டக்களப்பு மாவட்ட  ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பாளர்களுக்கு பகிரங்கமான வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பாளர்களுக்கு பகிரங்கமான வேண்டுகோள்

மட்டக்களப்பு மக்கள் 1989 ஆண்டும் கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) என்பவரை  பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். அப்போது செட்டிபாளையம் பாடசாலை வளாகத்திக்குல் கடத்தி கொண்டு வந்து  பல தமிழ் இளைஞர்களை விடுதலை புலிகள் என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் கொலை செய்தார்கள். தற்போது மீன்டும் போலி தேசியம் பேசி பணத்தையும், சாராயத்தையும் கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள கோவிந்தன் கருணாகரன் (ஜனா)  மீண்டும் தங்களின் காட்டிகொடுப்புக்களையும் கூட்டிகொடுப்புக்களையும் கைவிட்டதில்லை மீன்டும்  ஆரம்பித்துவிட்டான். 

செட்டிபாளையத்தில் புலவர் வீதியில் வசிக்கும்  அப்பாவி குடும்பம் ஒன்றை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திக்கு முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. அதற்காக விசாரணைக்கு வரும்படி பொலிஸாரால் வீட்டுக்கு வந்து நேற்று  கூறிசென்றுள்ளனர். இதற்காக அந்த அப்பாவி ஏழைக்குடும்பம் இம்மை மறுமையற்று பொலிஸ் நிலையத்திக்கு இன்று 12/09/2020 சனிக்கிழமை சென்றுள்ளார்கள். அப்போது கோவிந்தன் கருணாகரனின் மருமகன் சுப்பிரமணியம் கஜவதனம் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வருகைதந்து இருந்தார்கள். அதன் பின் ஜனாவின் மருமகன் பொலிஸ் பொறுப்பதிகாரி குணவத்தனையோடு பேசிவிட்டு வந்த பின். அந்த ஏழை குடும்பத்தை அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எந்தவித எழுத்து மூலமான விசாரணைகள் இன்றி நீங்கள்  விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலை புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டீர்கள் என்றும். உங்களை குடும்பத்தோடு சேர்த்து  அடைப்போம் என்று மிரட்டியுள்ளார். அத்தோடு விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்து இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

அத்தோடு  தங்கள் குற்றங்கள் வெளியே தெரிந்துவிட்டது என்று பொலிஸாரை தங்கள் அதிகார பலத்தையும், பணப்பலத்தையும் பயன்படுத்தி செட்டிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் தவராசாவின் நெறிப்படுத்தலில் பொலிஸாருடன் பேச்சுவார்த்தை செய்து. அந்த ஏழைகுடும்பத்தை முகநூலில் பதிவிட்ட நேரலை ( Live video)  முகநூலில் இருந்து அகற்றும்படியும் நாளை 13/09/2020  ஞூயிற்றுகிழமை விடுமுறை நாள் பொலிஸ் நிலையத்திக்கு வரும்படியும் எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆராய்ந்த போது பல உண்மைகள் வெளியாகியது.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ கட்சியின் உபதலைவரும். முன்னால் கிழக்கு மாகணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் மகள் அதுவும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் திருமணம் செய்து கைவிட்ட ஜனாவின் மூத்த மகளை இரண்டாவதாக பணத்திக்காக திருமணம் செய்ய போகும் செட்டிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கஜவதனன் நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் மதுபோதையில் தன் வெறியாட்டத்தினால் வீதியால் செல்லும் அப்பாவிகளையும் முதியோர்களையும் தாக்கி வந்தார். அப்போது ஜனாவின் தேர்தல் விளம்பர பதாதையை தனது சொந்த வீட்டின் கதவில் ஒட்டியிருந்ததை கிழித்து எறிந்த ஏழை சிறுவனை வீடு புகுந்து தாக்கியிருந்தார். பின்னர்  அதே சிறுவனை மீன்டும் வீதியில் மீன் வாங்கி வரும் போதும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஜனாவின் வீட்டுக்கு சென்று முறையிட்டுள்ளார்கள்.

ஜனா அவர்களை சமதானப்படுத்திவிட்டு மீன்டும் தன்னுடைய சாராயத்திக்காக நாக்கை தொங்கவிட்டு கிடக்கும் நக்கல் நாய்களை அந்த ஏழை சிறுவனின் குடும்பத்தை தாக்கும் படி அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற அடிவருடிகள் அங்கு இருந்த பெற்றோருக்கு இனிமேல் பிரச்சனை என்று வந்தால்  கொலை செய்வோம். என்று எச்சரித்துள்ளார்கள். இதன்   போது அச்சம் அடைந்த பெற்றோர்கள் கட்டாரில் தொழில் புரியும்   தங்கள் பிள்ளைகளுக்கு விடயத்தை எடுத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் அண்ணன். கட்டாரில் தொழில் நிமிர்த்தம் அங்கு இருப்பதால்  நாட்டுக்கு உடனடியாக வரமுடியாத காரணத்தினால்.  தனது தம்பிக்கு நடந்த தாக்குதலை கண்டித்து ஒரு அண்ணன் எனும் மனோநிலையில்  தாங்கிகொள்ளமுடியாத சூழ்நிலையில் நாட்டுக்கு வரமுடியாத சூழ்நிலையில்  தாக்குதலை மேற்கொண்ட நபர்களிக்கு தொலைபேசி ஊடாக பிரச்சனை தொடர்பாக பேசி முடிவு காண வேண்டும் என்று தொடர்வை மேற்கொண்டும் தொடர்பு துண்டிக்கப்பட்டதால். ஆத்திரத்தில் அண்ணன் என்ற அதிகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள தம்பிக்காகவும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள பெற்றோரின் நிலையினை கருத்தில் கொண்டு தன்னுடைய உறவுகளுக்கு ஏதும் பிரச்சனை வந்தால் இவர்கள்தான் காரணம் என்பதை அனைவருக்கு தெரிவித்து கொள்ள வேண்டும் என்று நினைத்து முகநூல் மூலம் நேரலையாக தன் ஆதங்கங்களை வெளிப்படுத்தி  பதிவிட்டு இருந்தார் என்பது உண்மை.

அத்தோடு ஜனாவின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள சுப்பிரமணியம் கஜவதனனின் அண்ணன் கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பிடிபட்டு சிறையில் பல ஆண்டுகள் இருந்து பிணையாளியாக வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இப்படிப்பட்ட குடும்ப பின்ன்ணியை கொண்ட கஜவதனன் சிந்திக்க தவறிவிட்டாரா? அல்லது தன் மாமாவின் பணத்தின் திமிரின் உச்சகட்டத்தில் வந்த வழி மறந்து மமதையாக செயற்பட்டு வருகின்றாரா?  

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்து ஊடகவியலாளர்களே, மட்டக்களப்பு மாவட்ட பொலிமா அதிபர் அவர்களே,  மனித உரிமை ஆணைக்குழுக்களின் பொறுப்பாளர் அவர்களே, மட்டக்களப்பு சிவில் சமுகத்தினரே இது உங்களின் கவனத்திக்கு.  ஒரு ஏழை குடும்பத்தை அரசியல் அதிகாரத்தினால் அடக்கியாள நினைக்கும் அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது உங்களின் கடமை. தயவு செய்து ஒரு ஏழையின் குடும்பத்தின் மரணத்தின் பின் விசாரணை நடத்துவதும் சந்தேக நபர்கள், குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்து பின் பணத்தின் பலத்தால் பிணையில் விடுதலை செய்வதும் இந்த நாட்டின் கண்கண்ட சட்ட விரோத செயற்பாடுகள். 
தயவு செய்து கோவிந்தன் கருணாகரனின் கடந்த கால கொலை குற்றச்சாட்டுக்களையும் தற்போதைய குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டியது உங்களது கடமையல்வா?