img/728x90.jpg
சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகளால் தியாக தீபம் திலீபனின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் அனைத்தும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது!

சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகளால் தியாக தீபம் திலீபனின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் அனைத்தும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது!

தமிழீழத்தை வல்வளைப்புச் செய்து ஆக்கிரமித்திருக்கும் தமிழீழத்தின் அண்டை நாடான சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகள் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் அனைத்தும் சிறிலங்கா இனவாத காவல்துறையினரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

கோத்தாவின் அடாவடி ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை தியாக தீபத்தை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.

இன அழிப்பு அரசு தனது அழிவுக்கு அத்திவாரம் இட்டுள்ள செயல் இது. வரலாறு இதற்கு வெகு விரைவில் விடை பகிரும்.

ஏனென்றால் மாவீரர்கள் என்பவர்கள் இந்த இனத்தின் 'ஆன்மா'க்கள். அதிலும் திலீபன் அதன் குறியீடாகவே இருக்கிறான்.

அரச பயங்கரவாதிகள் ஏதோ ஒரு கணத்தில் விடுகிற தவறு இதுதான். ஒரு நாள் மக்களின் ஆன்மாவில் கை வைத்து விடுகிறார்கள். அது மக்கள் புரட்சியாக வெடித்து விடுகிறது.

திலீபத்தின் அடிப்படை தத்துவமும் அதுதானே..

'ஒரு நாள் மக்கள் புரட்சி வெடிக்கும். சுதந்திர தமிழீழம் மலரும்'

வெல்வோம். இது உறுதி.