img/728x90.jpg
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்கள அரசால் இடித்து தள்ளப்பட்டது!

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்கள அரசால் இடித்து தள்ளப்பட்டது!

மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்து, மாணவர்களின் அச்சத்தை பயன்படுத்தி கீழ்த்தரமான அரசியல் யாழ்.பல்கலையில் அரங்கேற்றப்படுகின்றது.
பல ஆயிரம் மக்களின் நினைவாக கட்டப்பட்ட தூபியை இடித்தழிக்கும் நிலைக்கு பதவி ஆசை கொண்டுவந்திருக்கிறது. 

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்களால் இடித்தழிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் படையினர் நேரடியாக வருகை தந்து துணைவேந்தர் சகிதம் தூபிகளை பார்வையிட்டிருந்த நிலையில் பரபரப்பு தொற்றியிருந்தது.

ஆனாலும் தன்னிடம் நட்புடன் வந்த படை அதிகாரிகள் என விளக்கமளித்த துணைவேந்தர் அங்கு அமைக்கப்பட்டுள்ள போரில் உயிரிழந்தவர்கள் நினைவுதூபியை பார்வையிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையிலேயே இ;ன்றிரவு முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துணைவேந்தரை தொடர்புகொள்ள முற்பட்ட போதும் அவரது கைத்தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடிப்பு துணைவேந்தர் நியமனத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று நிறைவேற்றப்பட்டதென முன்னாள் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் குருபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே துணைவேந்தர் நியமத்தின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதாக குருபரன் தெரிவித்துள்ளார்.

தனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்த குருபரன் தற்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ளார்.