img/728x90.jpg
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு நகரை வந்தடைந்த பேரணி  முள்ளிவாய்க்கால் பகுதியை அடைந்து தொடர்ந்து பயணிக்கிறது...!

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு நகரை வந்தடைந்த பேரணி முள்ளிவாய்க்கால் பகுதியை அடைந்து தொடர்ந்து பயணிக்கிறது...!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.

நெடுங்கேணியில்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.

பேரணி தற்போது முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகனக் பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

புதுக்குடியிருப்பில்...

முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராத அளவில் திரண்டு பேரணியில் இணைந்தனர்.

அத்துடன் முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும் போராட்டத்துடன் இணைந்துள்ளது.

நீராவியடியில் தரிசனம்,

முன்னதாக முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தரிசித்ததைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் சென்றிருந்தது.

தற்போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியை குறித்த பேரணி அடைந்துள்ளது.இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக தூபியை கட்டுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தின் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில்...

இனப்படுகொலையின் உச்சம் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில்...

 

 

முல்லைத்தீவு நகரில்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டப் பேரணி இன்று உணர்வெழுச்சியோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் பெருந்திரளான தடைகள் தாண்டிப் பங்கேற்ற மக்களோடும் வார்த்தைகள் கடந்த உணர்வோடும்!
எந்த மண்ணில் எம்மை அழிக்க நினைத்தார்களோ அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுபட்ட தமிழினமாக மீளெழுந்மு போராடிக்கொண்டிருக்கிறது!

அரசியல் கடந்து மதம் கடந்து இனம் கடந்து மக்களை ஒன்றிணைத்தது இந்த போராட்டம் தான். இனியாவது தமிழ் தேசம் மக்கள் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விரும்பியோ விரும்பாமலோ பலரை களத்திலும் இறக்கியிருக்கிறது இந்த மக்கள் போராட்டம்.